முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பன்றியும் பூணூலும்

சமீபத்திய இடுகைகள்

நீட் ஒழிப்பு: காமராஜர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதி!

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும், அதையொட்டிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான மாணவர் பட்டியலும் இதுவரை இல்லாத வகையில் பெரும் சமூக அநீதி நிகழ்ந்துகொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

கல்விக்கான நமது நூறாண்டுப் போராட்ட வெற்றியின் அடித்தளத்தை அசைக்க நடக்கும்முயற்சி இது!

மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று வைத்திருந்த சதியை மாற்றி, அனைவருக்குமான கல்வியாக அதை உருவாக்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது!

பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்ட பள்ளிகளையும் திறந்து, ஒரு பங்கு கூடுதலாக பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பாய்ச்சிய கல்வி வள்ளல் காமராசரின் செயலுக்கான பார்ப்பனியத்தின் எதிர்வினை இது!

கம்யூனல் ஜி.ஓ ஆணை தொடங்கி, அதை நிறுவுதற்கான போராட்டம், 43 தொடங்கி 69% வரை சட்டபூர்வமாக நிறுவிய வெற்றி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மண்டல் கமிஷன் மூலம் பெற்று மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 49.5 என்று உயர்த்திய முயற்சி, அதை உயர்கல்வித்துறைக்கும் மெல்லமெல்லக் கொண்டு வந்த ஆட்சி என்று கடந்த 95 ஆண்டு கால சட்டப் போராட்டங்கள், …

’கருப்புச் சட்டை’ காத்திருக்கு பெரியார் திடலில்!

அப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீ திடலுக்கு வரத் தொடங்கினாய்!

நெஞ்சினிக்கும் நெய்மணக்கும் நெய்வேலி திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத்துக்குப் பிறகு, நாற்பதுக்கு நாற்பதென்று வெற்றிக்கனி பறித்து, சென்னையிலிருந்தபடி டெல்லியின் ஆட்சிக் கட்டிலுக்கு நான்கு கால்களையும் உறுதிசெய்திருந்தாய்!

2004 ஜூன் - கடல்கடந்தும் தமிழனாய் இணைத்த சிங்கப்பூர் சாரங்கபாணி நூற்றாண்டு விழாவுக்காக மீண்டும் கால் பதித்தாய் பெரியார் திடலில்!

’காலவெள்ளத்தில் வெவ்வேறு பயணங்களிலிருந்த எங்களை இணைத்தார் சிங்கப்பூர் சாரங்கபாணி - என்னை அழைத்ததும் ஒரு சாரங்கபாணி (ஆருயிர் இளவல் வீரமணி) தான்’ என்று சிலேடையால் மகிழ்ந்தாய்! ’அண்ணன் - தம்பி உறவென்றாலும் சண்டை வரலாம்; தாய் - தந்தை உறவென்றாலும் சந்தேகம் வரலாம்; திராவிடர் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இருப்பது தாய் - மகன் உறவு’ என்று நெஞ்சுருகச் சொன்னாய்!

இறையனார் மறைந்தார் - ஆசிரியர் அமெரிக்காவில்! தம்பிக்கும் சேர்த்து ஆறுதலாய் வந்து நின்றாய் திடலின் ஒரு குறுகிய அறையில்!

பொருளாளர் சாமிதுரை மறைந்தார் - அவர்தம் அன்பு நண்பர் திருச்சி மாநாட்டில்…

ராஜீவ் கொலையும், முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஆரிய சூழ்ச்சியே!

ஆதரவாக இருந்தவர்களையும் கொட்டிக் கொட்டி எதிர் நிலையில் வைத்திருக்கும் கைக்கூலி தமிழ்த் தேசியங்கள் வாழ்க! என்ன செய்ய வசவாளர்களையும் வாழ்த்தச் சொன்ன அண்ணா எங்கள் முன்னால்!


ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் அனைவர் மீதும்! ஒருபோதும் புலிகளை எதிர்நிலையில் நிறுத்தி விமர்சிக்க முடியாது.
திராவிடப் பேரினத்தின் உரிமைக் குரலின் இன்னொரு வடிவம் அவர்கள் ஏந்திய ஆயுதங்கள்!

அரசியலுக்கு பதிலாயுதம் அரசியல் - இந்தியாவில்!
ஆயுதத்திற்கு பதிலரசியல் ஆயுதம் - ஈழத்தில்!
மாவோவின் கூற்றை மறுபடியும் வாசித்துப் பாருங்கள்!

இங்கு திமுக-வையும், திராவிட இயக்கங்களையும், தலைவர் கலைஞரையும், தமிழர் உரிமையையும் வீழ்த்தத் துடிக்கும் அதே ஆரியம் தான், அங்கே தமிழீழ விடுதலைப் புலிகளையும், மேதகு பிரபாகரனையும், தமிழர் உரிமைப்போராட்டத்தையும் வீழ்த்தத் துடித்தது- துடிக்கிறது.

இங்கு இந்தியா என்னும் பெயரில் நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளையும், நாடு கடந்தும் ஆரியம் நிகழ்த்தியிருக்கிறது.
புலிகளின் நிலைப்பாட்டில், செயல்பாட்டில், உடனிருப்பதாக அவர்கள் நம்பிய நயவஞ்சகர்களின் சொல்லால் விளைந்த பேரழிவில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்! அவ…

டிஜிட்டலில் கரையும் டேட்டா?

ஹார்டு டிஸ்குகளில் கண்ணுக்குத் தெரியாத காரணங்களால் காணாமல் போகும் கோப்புகளைப் பற்றி அறிந்ததும், ஏற்படுகிற மனநிலை - அணுகுண்டு வீச்சில் அழிந்துபோன நகரங்களில் உறவுகளைத் தேடுகிற மனநிலை! சுவடே இல்லாமல் அழிந்துபோய்விடும் அவற்றைப் பதிவு செய்யவோ, காக்கவோ நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நொடியில் சிலிக்கான் பொதிகளுக்குள் கரைந்துபோய்விடுகின்றன. ஹெட் கடித்தாலும் மிச்சமிருக்கும் ஒலி/ஒளிப்பேழையின் (கேசட்) மேக்னடிக் டேப்பை செலோ டேப் கொண்டு ஒட்டி பத்திரப்படுத்தும் அளவிற்குக் கூட பாதுகாப்பில்லை. சிடிகள் நொறுங்கினால் 700 எம்பி, டிவிடி தெறித்தால் 4.7 ஜிபி, ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனாலோ ஒன்றிரண்டு டிபி என நம் வரலாற்றை, படைப்பை காணாதடித்து நம் பிபியை வெகுவாக எகிற வைத்துவிடுகின்றன. கடந்த தலைமுறை பிலிமாகவும், புத்தகமாகவும், படங்களாகவும் காத்து வைத்தவைகளை முழுமையான செலவுவைக்கும் தீர்வுகளுக்குப் போகமுடியாத நம் எளிய (சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்குகள் போன்ற) டிஜிட்டல் முயற்சிகள் ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுகின்றன. கிழிந்த தாள்களை ஒட்டியோ, சிதைந்த படத்தின் மீது வரைந்தோ அவற்றை மீட்டமைக்க முடியாது.

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன் Saravanan Savadamuthu பதிவிலிருந்து... //
இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது.
ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம்.
அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார்.
காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinamalar Daily News Paper…

இந்து மதமும் இந்துத்துவ அரசியலும் ஒன்றா?

"இந்து மதத்த பின்பற்றுவதும்.. இந்துத்வ அரசியல பின்பற்றுவதும் ஒன்னா...?????!!! அப்புடினு ஒரு கேள்விய எழுப்புராங்களே.... ப்ளீஸ் கொஞ்சம் விளக்குங்க.." என்று நண்பர் ஒருவருக்காக தோழர் ரத்ன. செந்தில் குமார் கேட்டிருந்தார். அந்த பதிவில் என் உடனடி இடுகைகள் (குறிப்புகள்) இவை.
//1. இந்து மதத்தைப் பின்பற்றுவோரை எளிதாக இந்துத்துவத்திற்குள் கொண்டுவந்துவிடலாம் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் கருத்து. மெதுவாக அப்படித்தான் இதுவரை அவர்களது வெற்றியும் வந்திருக்கிறது. ஆனால், தாங்கள் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருக்கிற மக்களிடம் இரண்டும் வேறு வேறானவை என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதனால், இந்துமதம் என்பது சரியானது என்பது நம் கருத்தல்ல என்பதையும் விளங்க வைக்க வேண்டும்.

2. பொதுவாக தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்பவர்களிடம், இந்துமதத்தின் கூறுகளைப் பார்க்க முடியாது. அவர்களிடம் இருப்பது பழக்க வழியின் அடிப்படையிலான வழிபாட்டு முறை. இந்துமதத்தின் வழிகாட்டு நூல்கள் அல்லது அதன் விதிமுறைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றுவதில்லை. தங்கள் குல வழக்கங்களையே இவர்கள் பின்பற்றுக…