முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பட்டை போட்டாச்சு!

வலைப்பூ சுனாமியின் யோசனைப்படி தமிழ்மணத்துக்கு ஆதரவு தெரிவித்து பட்டை போட்டாச்சு! எப்போதும் ஆதரவு தெரிவிப்பது தான் என்றாலும், கொஞ்ச காலத்துக்கு இப்போது அடையாளத்துக்காக ஆதரவுப் பட்டை! 'பட்டை' போட்டது தமிழ்மணத்துக்கு அல்ல! தமிழ்மணத்தை எதிர்க்கும் ஜாதி, மத வெறியர்களுக்கு! தொடரட்டும் தமிழ்மணத்தின் பணி!

முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலை உடைப்பு - கி.வீரமணி அறிக்கை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையினை காலிகள் சிலர் சேதப்படுத்தினர் என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது என்ற செய்தியை அறிந்த ஆத்திரத்தின் மேலீட்டால் இரண்டொரு தோழர்கள் தஞ்சையில் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது என்பது ஆத்திரத்தை ஊட்டக் கூடியதுதான் என்றபோதிலும் அதற்காக பூணூல் அறுப்பு போன்ற செயல்களில் இறங்க வேண்டாம் என்று தோழர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்திய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கையினை தமிழ்நாடு அரசின் காவல்துறை செய்து வருகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கைகளை உறுதியாக எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல் துறையை வலியுறுத்துகின்றோம்.வேறு சில இடங்களில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த காரணத்தால் ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழோ குண்டா சட்டத்தின் கீழோ சிறையில் இருப்பவர்களின் பிரச்சினையில் காவல்துறை கவனமாக இருந்து அது தொடர்ப

பதிவாளர் சந்திப்பு :-( தேற்றுவார் யாருமில்லை

பதிவர் சந்திப்பைத் தவறவிட்டதற்கு காரணம் சொல்வதன்று இந்தப் பதிவின் நோக்கம்! மாறாக என்னை நானே தேற்றிக்கொள்ளவே! இதற்கு முன்பு நடந்த சந்திப்பு (மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா)ஒன்றுக்கு, ப்ளாக்கராக இல்லாத போதே, விஜய் டிவி-யின் நீயா? நானா? நிகழ்ச்சியில் பங்கேற்க விடுத்த அழைப்பையும் மறுத்து வந்து கலந்து கொண்டேன். அப்போதுதான் வரவணையான், பாலா ஆகியோர் அறிமுகம் எனக்கு! ஏப்ரல் 22 - பதிவாளர் சந்திப்பு என்று அறிவிப்பு வந்த நாளிலிருந்து, என் தேர்வு நாளுக்கு பங்கம் வராமல் இருப்பதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தேன். அதனை பாலாண்ணனிடமும் சொல்லி உறுதிப் படுத்தியிருந்தேன். இதற்கென தனித் தயாரிப்புகளோடு வருவதெனத் தீர்மானித்திருந்தேன். ஏப்ரல்-20 அன்று தேர்வுகள் முடிந்து விட்டதென மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில், செயல்முறைத் தேர்வுகளையும், முடிக்க வேண்டிய குறும்படப் பணிகளையும் பட்டியலிட்டு, 23,24 உனக்கு கால்ஷீட் என்று கட்டிப்போட்டுவிட்டார். அதையும் தாண்டி இன்று வந்து தீர வேண்டுமென மதியம் கூட பாலாண்ணனிடம் பேசி தயார்செய்து கொண்டேன். காலையில் தொடங்கிய பணி ஈ......ழு.......ஈ......ழு..... என்று இழுத்த

பூணூல் அறுக்கப்படும்தான்!

பெரியார் சிலை உடைப்பு மீண்டும் அரங்கேறிருக்கிறது. திருச்சி திருவரங்கத்தில் பெரியார் சிமெண்ட் சிலையை உடைத்து, வெங்கலச் சிலை வைக்க ஊக்கம் கொடுத்த கூட்டம், ஊரெங்கும் பெரியாரின் முழு உருவ வெங்கலச் சிலை வைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. "அய்யாவின் 128-ஆவது பிறந்தநாளையொட்டி 128 பெரியார் சிலைகள் நிறுவப்படும்" என்று தமிழர் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி பணிகள் தொடங்கிவிட்டன. வெறும் சிலை நிறுவுவதல்ல அதன் நோக்கம், சிலையின் அடிப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் "கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; அவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்" என்ற தந்தை பெரியார் தந்த கடவுள் மறுப்பு வாசகத்தை கல்வெட்டில் பொறித்து, இதை சொல்லிய ஒரு கிழவன் 95 ஆண்டுக்காலம் வாழ்ந்து, இறுதிவரை கடவுள் மறுப்பில் உறுதியாய் நின்றான்; அதை சொல்லிய படி, ஒரு மானமீட்பு இயக்கம் இந்த மண்ணில் இயங்

அட்சய திருதியை! - ஆரியக் கொள்ளை!!

தலைப்பைப் பார்த்ததும் சிலர் குதிக்கக்கூடும்... "இது துவேஷம், அர்த்தமற்ற ஆவேசம், இதற்கும் பிராம்மானோத்தமர்களுக்கும் என்ன தொடர்பு? நகைத் தொழில் செய்வது எங்கள் குலத் தொழில் அல்லவே, லாபம் எங்களுக்கா வருகிறது???" இப்படியெல்லாம் கேள்விகள் வரக்கூடும், அதனால் செய்தியைப் படித்துவிட்டு பிறகு குதிக்கவும்... இந்த வருடம் அட்சய திருதியை ரெண்டு நாளாம்! ஒரே நாளில் ஒட்டுமொத்தக் கூட்டமும் வந்தால் சமாளிக்க முடியாது என்பதால், இரண்டு நாள் என்று ஆக்கிவிட்டார்கள்! அடுத்த ஆண்டு ஆடித் தள்ளுபடி மாதிரி ஒரு மாதம் முழுக்க என்று அறிவித்தாலும் இந்த பேராசைக் கூட்டம் வரிந்து கட்டி வரிசையில் நிற்கத்தான் போகிறது. (என்ன ஆடியில் எது செய்தாலும் விளங்காது என்ற மூடத்தனத்தை ஆடித் தள்ளுபடி அடித்து உடைத்தது என்பது தான் ஒரு மகிழ்ச்சி!) சரி,இதில் ஏன் பார்ப்பனர்களைக் குறை சொல்கிறாய் என்பவர்களுக்கு ஒரு செய்தி: இன்று மதியம் சன் தொலைக்காட்சியில் (19.04.07) அட்சய திருதியை பற்றிக் கருத்துச் சொன்ன ஜோதிடத்திலகம் ஒருவர், "இந்த ஆண்டு அட்சய திருதியை கரிநாளில் வருகிறது; அதனால் அது தோஷம். அந்தப் பிரச்சினை தீர வேண்டுமானால் பிரா

இங்கிலிபீசு மேட்டரு.....!

if yuo cna raed tihs, yuo hvae a sgtrane mnid too. Cna yuo raed tihs? i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! if you can raed tihs forwrad it. படிக்க முடியாட்டியும் அடுத்தமுறை முயற்சி பண்ணுங்க.. முடிஞ்சா அடுத்தவங்களுக்கும் சொல்லுங்க! முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சரியா இருந்ததுன்னா போதும், நம்ம மூளையே எளிமையா படிச்சுடும். அப்படின்னு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பண்ண ஆய்வாம்-யா இது! சரி, சரியான வடிவம் கீழ பாருங்க! If you can read this, you have a strange mind too. Can you read this! I couldnot beli

மே நாளில் (மே-1) வருகிறார் `பெரியார்!- தினமலருக்கு நன்றி!

மேதினியெங்கும் மே நாளில் (அறிவித்த தேதிக்கு முன்பே)வருகிறார் `பெரியார்! எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகி வெளிவரவிருக்கும் ``பெரியார் திரைப்படம் மே 25 ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால் எங்கெங்கிருந்தும் பொதுமக்களில் பலரும் ``பெரியார் பற்றாளர்கள் பலரும் எப்போது வரும் எப்போது வரும் என்று இடைவிடாது தணியா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே இருப்பதனால் அவர்களது ஏகோபித்த ஆசையைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகத் தொழிலாளர்களின் கொண்டாட்ட நாளான மே முதல் நாள் (1.5.2007) செவ்வாய் அன்று சென்னை தலைநகர் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் பேரூர்களில் ``பெரியார் திரைப்படம் வெளிவரவிருக்கிறது என்பதை ``லிபர்ட்டி கிரியேசன்ஸ் சார்பில் மகிழ்ச்சியுடன் அறிவிக்க விரும்புகிறோம்.மே நாளில் ``பெரியார் படம் வெளியாவதற்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ள இப்பட விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நமது இதயங்கனிந்த நன்றி! குடும்பம் குடும்பமாக மே நாளை குதூகலமாக கொண்டாடுவோம்.திரளுவீர்! திரளுவீர்!! திரளுவீர்!!! கோ. சாமிதுரை, இயக்குநர், லிபர்ட்டி கிரியேசன்ஸ் நன்றி: விடுதலை (16.04.07) பின்குறிப்பு: "

இந்தத் புத்தாண்டினால் பயனுண்டா? - ஜோதிடப் பதிவு அல்ல

ஆண்டுக் கணக்கு என்பது காலத்தைக் கணக்கிடுவதற்கும், காலத்தைப் பதிவு செய்து கொள்வதற்கும்தான். இதில் தெளிவாக இருக்க வேண்டும். எந்த ஆண்டுக் கணக்காக இருந்தாலும், கி.பி, தி.பி, சாகா... இப்படி எதுவாக இருந்தாலும்! உலகெங்கும் பொதுவான கணக்காக கிரிகோரியின் நாள்காட்டியும்,. பின்னர் அதில் வந்த திருத்தங்களும் எற்றுக்கொள்ளப்பட்டு, ஆங்கில ஆண்டு என்று வழங்கப்படுகிறது. அவரவர் பண்பாட்டின் அடையாளமாக மட்டுமே மற்ற ஆண்டுக் கணக்குகள் பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் தமிழ்ப் புத்தாண்டும்! ஆனால் அப்படி கொடாடப்படும் புத்தாண்டில் பயன் இருக்க வேண்டாமா? 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் வருகிறது என்பது எப்படி பயன்பாடுடையதாக இருக்க முடியும். 300 வருங்களுக்கு முன் வந்த ஏதோ ஒரு 'சர்வசித்து'வில் நடந்த நிகழ்வை சர்வசித்து ஆண்டு, சித்திரை 1-ல் நடந்தது என்று வரலாற்றில் பதிவு செய்தால், எந்த சர்வசித்து என்று யாராலாவது சொல்ல முடியுமா?(பிறிதொரு ஆண்டுக் கணக்கின் உதவியில்லாமல்) 2007-இல் வந்த சர்வசித்து என்றோ, 1947-ல் வந்த சர்வசித்து என்றொ சொல்லாமல், தற்சார்பாக இயங்கும் வல்லமை சுழற்சி முறை ஆண்டுகளுக்கு உண்டா? எப்போதுமே தனித்து

மாதங்கள்: பெயர் வந்த விதங்கள்

செங்கோ முன்னும் பின்னுமாக இரண்டு தலைகள் முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் அடர்ந்த தாடிகள். இவை விசித்திர உருவமாகத் தென்படுகிறது அல்லவா? இது ஒரு கடவுளின் உருவமாம். கிரேக்கக் கடவுள். இந்தக் கடவுள் இன்றைக்கு உயிருடன் இல்லை. இது மாஜி கடவுளாகிவிட்டது. இதன் பெயர் ஜனுஸ். ஆனால் இந்தக் கடவுளின் பெயரால் அமைந்த ஜனவரி மாதம் நம்மிடையே இருந்து வருகிறது. ஆனால் நாம் யாரும் மாதத்தைச் சொல்லும்போது கடவுளைப் பற்றி நினைப்பது கிடையாது. மற்ற நேரங்களில்கூடக் கடவுளை எதற்கு நினைக்க வேண்டும்? மனிதர்கள் தவறு செய்கிறார்கள்; குற்றம் புரிகிறார்கள். இதை மதம் பாபம் என்கிறது. பாபம் செய்தவன் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறது. பரிகாரம் செய்வதால் - செய்த குற்றம் இல்லை என்றாகிவிடுமா? ஆகிவிடாது. இருந்தாலும் பரிகாரம் செய்வது என்ற பெயரில் பலி கொடுத்தார்கள். கோழி ஆடு ஒட்டகம் என்று பலி கொடுத்து வந்தனர் பழங்காலத்தில்! காட்டுமிராண்டிகள் இன்றும்கூட பலி இடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்தினர் இன்றளவும் பலி இடுகிறார்கள். அதனால் தான் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார் தந்தை பெரியார். இந்தப் பலி பீடங்கள் பெப்ருவாலியா என அழைக்கப்பட்டன.

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன் திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு சமஸ்கிருத ஆண்டை தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை. தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா? தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!. நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை? மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா? தண்ணீர் என்பதற்கு ஜலம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமி

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

-தஞ்சை நாராயணசாமி பிரபவ முதல் அக்ஷய வரை 60 வருடங்கள் சித்திரை முதல் நாளை ஆண்டு துவக்க நாளாகக் (தமிழ்ப் புத்தாண்டு) கொண்டிருக்கிறார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் இந்த நாளை விஷு புண்ணிய காலம் என்பர். வடதேசத்தில் பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் தெலுங்கு தேசத்தில் ஆண்டு தொடக்க நாளை யுகாதி என்றும் கொண்டாடுகிறார்கள். வருஷப் பிறப்பு என்பது சில தெய்வீகக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது. மற்ற பண்டிகைகளைப் போன்றே புத்தாண்டு தினத்திற்கும் தெய்வ வழிபாட்டு நியதிகள் உண்டு. தெலுங்கு தேசத்தவர் வருடப் பிறப்பன்று எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தி வடை போளி பாயசத்துடன் சமையல் செய்து பண்டிகை கொண்டாடுவர். கேரளத்தில் முதல் நாள் நடுக் கூடத்தில் அரிசி காற்கறிகள் எல்லாம் சேமித்து வைத்து குத்து விளக்குகளும் ஏற்றி விடிந்து எழுந்ததும் கண்ணை மூடிக் கொண்டே நடுக்கூடத்துக்கு வந்து முதல் முதலாகக் கண்ணாடியில் பார்ப்பார்கள். இதனால் ஆண்டு முழுவதும் யோகம் கூடும் என்பது அய்தீகம். இதை விஷுக்களி காணுதல் என்பர். கேரளாவில் நடைபெறும் இன்னொரு வழிபாடு குருவாயூரப்பனின் தரிசனம்

உலகப் புரட்சி ஒருநாள் வெடிக்கும்!

படிப்பு(தேர்வு) விடுமுறைக்காக ஊருக்குப் போயிருந்ததால் ஒரு வாரமாக பதிவு போட முடியவில்லை. நான் ஊரிலிருந்த ஏப்ரல்9-ஆம் தேதி, ஈராக் அமெரிக்கா வசம் வந்ததன் 4-ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் பற்றியும், அதற்கு எதிரான போரட்டங்கள் குறித்தும் செய்தி வந்து கொண்டிருந்தது. பார்த்ததும், அதே நாள் நான்கு வருடங்களுக்கு முன் நினைவு வந்தது. அமெரிக்க கூலிப்படைகள் ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. சதாம் நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கிறது அமெரிக்கா! மார்ச்-20,2003-இல் தொடங்கியது அமெரிக்காவின் படையெடுப்பு. குடியிருப்புப் பகுதிகளின் மேல் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி எண்ணற்றோரைக் கொன்று குவிக்கிறது அமெரிக்கக் கூட்டுப்படைகள். போரைத் துணிவுடன் எதிர்கொள்வோம் என ஈராக் அறிவித்தது. 'மாவீரன் சதாம் வாழ்க' என்று எனது மிதிவண்டியின் முன்பகுதியில் சதாம் படத்தை ஒரு அட்டையில் ஒட்டி, கட்டிக்கொண்டு காரைக்குடியில் வலம் வந்தேன். எப்போதும் எங்கள் வீட்டின் தலைவாசலில் தந்தை பெரியாரின் படமும், மாவீரன் பிரபாகரன் படமும் இடம் பெற்றிருக்கும். அந்த நாட்களில் சதாம் படத்தையும் கணினி அச்சு எடுத்து அட்டையில் ஒட்டி வாசலில் வைத்த

'பெரியார்' ஒளிக்காட்சி

'பெரியார்' திரைப்படம் வரலாற்றுக் காவியமாக, செல்லுலாயிட் ஓவியமாக மே மாதம் 25-ஆம் தேதி வெளியாகப் போகிறது. தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருப்பினும், இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும், அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் துணைத்தலைப்புகள்(Subtitles) இடப்பட்டும் ஒரே நாளில் உலகெங்கும் வெளியாக இருக்கிறது. தந்தை பெரியரின் ஒளிக்காட்சிகளை வண்ணத்தில் நீங்கள் இங்கே பார்க்கலாம். நீங்கள் இந்தப் படக்காட்சியை பல இடங்களில் பார்த்திருக்கக்கூடும். இணைய உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வண்ணக் காட்சிதான் இது. இங்கும், ஆர்க்குட்டிலும் தோழர்கள் நிறைய பேர் இதைத் தங்களுக்குப் பிடித்த பக்கங்களாக சேமித்து வைத்துள்ளார்கள். ஆனாலும் இந்த வீடியோ காட்சி எப்படி உருவானது என்பது பலருக்குத் தெரியாது. அதை கொஞ்சம் பின்னோக்கிய பார்வையில்(reverse process) பார்ப்போமா? இந்த படக்காட்சியை youtube அல்லது கூகிள் தரும் வசதியால் நாம் பார்த்து வருகிறோம். 'உண்மைகள் உறங்காது' என்ற குறிப்பிட்டு தோழர்......... ம், நமது பதிவர் திருவும் தங்கள் தளங்களில் ஏற்றி, உலகெங்கும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர்க