முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கப்பலேறிப் போயாச்சு! - கதாகாலட்சேபம்

Kappaleri poyachu ... (எங்கள் தங்கம் படத்தில் மொட்டை போட்டபடி எம்.ஜி.ஆர் நடத்தும் நிலாவுக்கு இந்திய ராக்கெட் போவது பற்றிய கதாகாலட்சேபப் பாணியில் நிமிட்ஸ் கப்பலின் சென்னை வருகைப் பற்றி...) கதா : ஆதௌ கீர்த்தன ஆரம்பத்திலே... அமெரிக்கா... அமெரிக்கா... எனப்பட்ட தேசத்திலேயிருந்து ராணுவக் கப்பல் ஒன்று கீழைத் தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டது.நிமிட்ஸ்-ங்கிற அந்தக் கப்பல் இந்தியா வந்து சென்னைத் துறைமுகத்தில நிக்கறதுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பியது. ரங்கு : ஏன்னா.... கப்பல்னா துறைமுகத்திலதான் நிக்கும். பின்ன ரோட்டிலயா வந்து நிக்கும். அதுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிச்சா. கதா : அடே ரங்கு! வந்த நிமிட்ஸ் இருக்கானே அவன் சாதாரண கப்பல் இல்லேடா... அண்ட பகிரண்டமொடு எத்திசையும் அதிர சண்டப் பிரசண்டனென குண்டுகளும் அதிர... ரங்கு, சுப்புனி : சண்டப் பிரசண்டனென குண்டுகளும் அதிர... கதா : உலகெல்லாம் சுற்றிய போர்க் கப்பல்டா அது... வெறும் போர்க்கப்பல் இல்ல... அணு உலையில இயங்குற அணு ஆயுதக் கப்பல்... சுப்புனி : உலகெல்லாம் சுத்தினதா...எந்தெந்த நாடு மாமா... கதா : ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம்னு அமெரிக்கா அமைதிப் பணி செ

காக்க காக்க கனகவேல் காக்க...

காக்க காக்க கனகவேல் காக்க... நோக்க நோக்க ரோப் காரை நோக்க... பார்க்க பார்க்க பழனி மலையிலே... பாதியில் விழுந்து பலியான பக்தர்களை... அங்கீகரிக்கப்பட்ட தமிழ்க் கடவுளான முருகனை தரிசிக்கச் சென்று, ரோப் காரில் பயணம் மேற்கொண்ட ஆவின் மேலாளர் சுப்பிரமணியம், அவரது மனைவி, மகள் உள்பட நால்வர் பலியாகி, ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். நானும் காலையிலிருந்து பார்க்கிறேன் தமிழ்மணத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு கண்டனம் கூடப் பதிவாகவில்லை. ரோப் கார் மரணம்- ஏனிந்த மவுனம்? பழநி மலையில் பயங்கரம் ரோப் கார் அறுந்து 4 பேர் பலி 250 அடி உயரத்தில் இருந்து விழுந்து பரிதாபம் 72 பக்தர்கள் கயிறு மூலம் பத்திரமாக மீட்பு பழநி, ஆக.27: பழநி மலையில்250 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த ரோப்கார் திடீரென அறுந்து விழுந்ததில் தமிழ்நாடு ஆவின் பொது மேலாளர், திண்டுக்கல் ஆவின் நிர்வாக இயக்குனர் உட்பட 4 பேர் பலியாயினர்.சென்னையை சேர்ந்த தமிழ்நாடு ஆவின் பொது மேலாளர் சுப்பிரமணியம் (50), நேற்று தனது குடும்பத்துடன் பழநி முருகன் கோயிலுக்கு வந்திருந்தார். மாலை 5 மணிக்கு மலைக்கோயிலுக்கு ரோப் காரில் அவர்கள் சென்றனர். ரோப் காரின் 3வது ப

பறையிசையில் டைட்டானிக்!

உலகெங்கிலும் இசை ரசிகர்கள் பெருமளவில் ரசித்த டைட்டானிக் படம் பற்றிய 'செலன் டியோனின்' "every night in my dreams" பாடலை நமது பறை இசையோடு இணைத்து, அதற்கு காதலன் படத்தின் படக்காட்சியையும் பயன்படுத்தி அசத்தியிருக்கிறார்கள். பறையிசை எப்படி அழகாக பொருந்துகிறது... பார்த்தீர்களா?

வெறித்துப் பார்த்தார்...விரட்டி வந்தார்...

நமது ஆடைகளில் இருக்கும் வாக்கியங்கள் என்ன பொருள் கொண்டிருக்கின்றன என்று என்றைக்காவது படித்திருக்கிறோமா? ஆபாசத்தின் அடையாளங்களாக, பெண்கேலியின் வடிவங்களாக படங்களும் எழுத்துகளும் அச்சிடப்பட்டிருக்கின்றன். இளைஞர்களும், இளைஞிகளும் 'அழைக்கும்' தொனியில் அமைந்த வாசகங்களையும் கூட கூச்சமின்றி அணிந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் எதாவதொரு நிறுவனத்தின் விளம்பரத்தை கட்டணமின்றி உடலில் சுமக்கிறோம். அதிலும் விளையாட்டு வீரர்கள் அணிதிருக்கும் நிறுவனங்களின் விளம்பரம் என்றால் அதற்கு தனி மவுசு.. (அட எலிக்குட்டி இல்லப்பா..) இல்லாவிட்டால் நடிகர் நடிகைகளின் விளம்பரம் தாங்கிய பனியன்கள் கிடைக்கின்றன. இங்கிலீஷில் என்ன எழுதியிருந்தாலும் வாங்கி அணிந்து கொள்ளவும் நாம் தயார். அந்த வகையில் தமிழ் எழுத்துகள் அடங்கிய சேலையை வடிவமைத்து விளம்பரப்படுத்திய சேரன் பாராட்டுகுரியவர். புரட்சியாளர்களை நெஞ்சில் சுமந்து அதை அதிக அளவில் விளம்பரப்படுத்தியவர் அண்ணன் சீமான் தான்! சேகுவேராவை தமிழகமெங்கும் திரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது சீமானே! அது அவரது அடையாளமாகக் கூட ஆனது. தந்தை பெரியாரின் உருவம் தாங்கிய பனியன்கள் அவ்வப்போ

பெப்சி உமா நிகழ்ச்சி பற்றி பாமரன்!

சில நேரங்களில் இந்தக் காது ரெண்டும் அவிஞ்சு போகாம ஏன் தான் முழுசாக் கேக்குதோ? என்கிற கவலை அதிகமாயிடுச்சுங்க. தொலைக்காட்சியில் உமா நடத்தும் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் விவேக்குடன் பேசிய ஒரு ‘குடும்பத் தலைவி”..... “எனக்குப் பத்து பன்னெண்டு வயசுல ரெண்டு பையன்க இருக்காங்க... நானும் வயசுக்கு வந்தாப்பல இருந்து டிரை பண்றேன். இப்பத்தாங்க லைனே கெடச்சுது. கையும் ஓடலே.... காலும் ஓடலே..’’ என்று ‘லைன்’ கிடைத்த பரபரப்பில் உதிர்த்தார் தனது ‘முத்துக்களை’. ஒருவேளை இந்த அம்மணி வயசுக்கு வந்தப்பவே லைன் கிடைத்திருந்தால், அந்தப் பையன்களின் இன்ஷியலே மாறியிருக்குமோ என்னமோ? யார் கண்டது? கர்மம்டா சாமி. -பாமரன் நன்றி: குமுதம் (22-08-2007) இது இனிஷியல் மாறின குழந்தையில்ல..... பின்ன யாருன்னு கேகுறேளா? நம்ம உமா மாமிதான்.. சின்ன வயசில...மடிசார் நன்னா இருக்கோல்யோ..

ஆச்சி மசாலாவில் ஆயாவின் கருத்து!

ஆச்சி மசாலா உங்கள் சாய்ஸ் நடத்தும் 'பெப்சி'உமா என்பவர் "இன்டர்நெட்-இல் புளக்கிங் என்ற பெயரில் மீடியா பீப்பளை பதிவர்கள் தாக்கிறது கொடுமை" என்று தனது முத்துக்களை உதிர்த்திருக்கிறார். இதை நமது சின்னக்குட்டி தனது பதிவில் போட்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள்! "நாங்க மட்டும்தான் விமர்சனம்ங்கிற பேரில நன்னா கால் மேல கால் போட்டுண்டு பேசணும். அதுக்காகத் தான் எல்லா மீடியாலயும் நாங்களே இருக்கணும்-னு சொல்றோம். ஏதோ கையில கம்பியூட்டர் கிடைச்சிடுச்சின்னு நீங்கள்லாம் ஆரம்பிச்சுட்டா எப்படி?" அப்படிங்குறாரா உமா மாமி!" என்று நான் போட்ட பின்னூட்டத்திற்குக் கூட "இதுக்கெல்லாம் பாப்பாத்தி-ன்னு கிளப்பாதீங்க!" என்கிற ரீதியில் பதில் வந்திருக்கிறது. இதற்கிடையில் 'செந்தழல் ரவி' "தற்சமயம் நான் வெளியூரில் இருப்பதால் உண்மைத்தமிழன், வரவணை, சுகுணா, ப்ரின்ஸ், லக்கிலூக், பொட்டீக்கடை போன்றவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு நடத்துவார்கள்" என்று பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். செய்யாமல் விடமுடியுமா? சரி, விசயத்திற்கு வருகிறேன். மாலன் மீதான பதிவர்களின் கொந்தளிப்பின்