முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாம் கேளுங்க....மீசையில் மண் ஒட்டவில்லை!

ஹே! எல்லாம் கேட்டுக்க.... கேட்டுக்க....! மீசையில எனக்கு மண் ஒட்டலை... ஒட்டலை... ஒட்டலை! ஏன்னா எனக்கு மீசையே இல்ல...! உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஆதரவாக, மனுத் தாக்கல் செய்யவந்த அரசியல் புரோக்கர் சு.சாமி மீது முட்டை வீசப்பட்டபின் ஓடிஒளிந்து நீதிபதிகளிடம் புகார் அளித்துவிட்டு, வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த சு.சாமி, சாரி... (thatsislam-இன் வேண்டுகோள்படி மு.சாமி ) கருத்து தெரிவித்ததாவது: கோர்ட்டுக்குள் நான் நுழைந்தபோது சிலர் முட்டை வீசினார்கள்.. அதில் சில வக்கீல்களும் இருந்தார்கள். அவர்கள் வீசியது டேபிளின் மீது விழுந்தது. அங்கிருந்த File-களின் மீது விழுந்தது. டவாலியின் மீது விழப்போனது. இதை நீதிபதிகள் பார்த்தார்கள். பின்னர் அந்த கும்பல் ஒரு காவலரைப் பிடித்து அடித்து உதைத்தது. நீதிமன்றத்துக்குள் அவர்களது அட்டூழியத்தை நான் நீதிபதிகளிடம் புகார் செய்தேன். அவர்களும் பதிவு செய்துகொண்டனர்." இதை அவரு(னு)க்கேயுரிய ஜுனூன் தமிழில் சொன்னார். சரி... உன்னைய அடிச்சது உண்மையா-இல்லையா?... முட்டை உன் மேலே விழுந்ததா? இல்லையா? அதைச் சொல்லுப்பான்னா? பென்ச்-ல விழுந்தது... இன்ச்

தைரியமான ஆளாக இருந்தால்.... விஜயகாந்த் சவால்!

ஊருக்குள் ஒரு கோவணாண்டி இருந்தானாம். அவனது கோவணமும் கிழிந்து தொங்கும் நிலை வந்துவிட்டதாம். வேறென்ன செய்வது என்ற குழப்பத்தில் தானே அந்த கோவணத்தைக் கிழித்துக் கொண்டு அலைந்துவிடுவோமோ என்று வேறு பயம் வந்துவிட்டது. இத்தனை நாள் விட்டுக் கொண்டிருந்த சவடால்களுக்கெல்லாம் சமாதி கட்டும் நிலை வந்துவிட்டதைக் கண்டு தவித்தவனுக்கு திடீரென்று உதித்தது ஒரு யோசனை. விட்டான் அடுத்த சவடால்!!! "என்னைப்போல அம்மணமாகத் திரிய யார் இருக்கிறார்?...! தைரியமான ஆளாக இருந்தால் வாருங்கள் போட்டிக்கு!" என்று சவால் விட்டாராம்... அந்தக் கதை தான் இப்போது விஜய்காந்துக்கு! அடித்த போதை தெளிந்து இப்போது தான் வந்தார் போலிருக்கிறது. இத்தனை நாள் ஈழத் தமிழர் பிரச்சினையில் மூடிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது கிளம்பியிருக்கிறது அவருக்கு வேகம்.. திருமங்கலத்தில் சூடு கண்ட பூனை, தன் சூட்டை மறைத்துக் கொள்ள விட்டிருக்கிறது ஒரு ஸ்டேட்மெண்ட். "ஈழத் தமிழருக்காக நாடாளுமன்றத்தை புறக்கணிக்க அரசியல் தலைவர்கள் தயாரா? நான் தயார். அவ்வாறு வந்தால் நான் முதலில் நிற்பேன்" என்று! அடடே! வரவேற்கத் தக்கதுதான்.. இதிலென்ன குறை கண்டீர் என்க