முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வடக்கின் வசந்தத்தில் வீரமணியா?

ஸ்ரீலங்கா அரசின் கொலைவெறித் தாக்குதல்களுக்குப் பிறகு உலகை ஏமாற்றவும், மீள்கட்டமைப்புப் பணி லாபத்தில் உலகிற்கு பங்கு கொடுக்கவும், உருவாக்கப்பட்டுள்ள வடக்கின் வசந்தம் திட்டத்தை தொடக்கம் முதலே திராவிடர் கழகம் எதிர்த்து வந்திருக்கிறது. போராளிகளுக்கான களமாக, பாசறையாக காடுகள் இருப்பதால் அவற்றையும் அழிக்கும் பணியில் ஈடுபடவுமே இந்தத் திட்டம் என்பதையும் தோலுரித்துவருகிறது. இந்நிலையில், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம், தனது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஒப்பந்தம் போட்டுள்ள எண்ணற்ற நிறுவனங்களில் ஒன்றான CIDC -யும், வடக்கின் வசந்தம் திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது என்ற செய்தி வெளியானது. எந்தக் காலத்திலும் தமிழர்களின் நலனுக்கு எதிரான எதனையும் எதிர்க்கத் தயங்காதது திராவிடர் கழகமும், அதன் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்களும் ஆவார்கள். ஆனால் எதை வைத்து இவரை குறை சொல்ல முடியும் என்ற கண்கொண்டு அலையும் கும்பலுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லையே... இதோ கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி "விடுதலை" ஞாயிறு மலரில் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழர் தலைவர் கி.வீரமணி. குதர்க்கம் மட்டுமே நோக்கமாகக் கொண