முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பகுத்தறிவு குறும்படத் திருவிழா - டிச 25

விடுமுறை நாளில் குடும்பத்துடன் குதூகலிக்க... நாள் முழுக்க பகுத்தறிவு குறும்படத் திருவிழா பெரியார் திரை குறும்படப் போட்டி -2009 டிசம்பர் 25 - காலை 10 மணி முதல் திரையிடல் தொடர்ந்து நடைபெறும்! 5 பிரிவுகள் 50 குறும்படங்கள் காலை 10 மணி முதல் திரையிடல் தொடர்ந்து நடைபெறும்! பங்கேற்பு: தமிழர் தலைவர் கி.வீரமணி இயக்குநர் ஜனநாதன் இயக்குநர் பாலாஜி சக்திவேல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கவிஞர் கலி. பூங்குன்றன் அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்!!

17-ஆம் தேதி எங்கே இருக்கீங்க?

17- ஆம் தேதி எங்கே இருக்கீங்க? எங்கே இருந்தாலும் அவசியம் வர மறந்துடாதீங்க? என்ன விசயமா? அட, நான் இயக்கிய 'திற' குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நடக்குதுங்க! 'திற' (குறும்படம்) - - மதவெறி குடித்த ரத்தத்தின் ஒரு துளி - - திரையிடல் . திறனாய்வு ------------------------------ ------------------------------ ------------------------------ ---------- 17.12.2009 | வியாழன் | மாலை 6.30 மணி ரஷ்ய கலாச்சார மய்யம் (ஹோட்டல் சோழா பின்புறம்), சென்னை-18 ------------------------------ ------------------------------ ------------------------------ ---------- தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி மதவெறிக்கு எதிரான குரல்கள் கவிஞர் கலி.பூங்குன்றன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 'நக்கீரன்' கோபால் 'திரைப்பட இயக்குநர்' எஸ்.பி.ஜனநாதன் வழக்கறிஞர் அ.அருள்மொழி 'நிழல்' திருநாவுக்கரசு 'தலித் முரசு' புனித பாண்டியன் பேராசிரியர் ஹாஜா கனி பேராசிரியர் ரவிராஜ் 'திரைப்பட இயக்குநர்' சே.பாத்திமா பீவி ------------------------------ ------------------------------ --------

கடவுள்.. நடிகைகள்.. தினமலர்.. பொதுப்புத்தி.. கமல்ஹாசன்..

க டவுள் வேடமேற்று நடிப்பதற்கு ஒழுக்கமான நடிகைகளைத்தான் அழைத்து வரவேண்டுமாம். நிஜ வாழ்க்கையில் தப்பான முறையில் நடந்து கொண்டிருக்கும் நடிகைகளை சாமி வேஷங்களில் நடிக்க வைக்கக்கூடாது என்று வழக்குப் போடப் போகிறாராம் ஒருவர். அவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவரோ, இந்துமதத்தைச் சேர்ந்தவரோ அல்ல, தனது நாட்டின் சகோதர மதமான இந்துமதம் இழிவுபடுவதாக வருத்தப்பட்டு பாரம் சுமந்திருப்பவர் சவுதி அரேபியாவில் தொழில் நடத்திவரும் மஸ்தான் என்ற தமிழ்நாட்டு இஸ்லாமியர் என்று பெருமை பொங்க செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். (நக்கீரன் 17.10.09). மஸ்தான் தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவரது நண்பர் அந்த தொலைக்காட்சியில் அம்மன் வேடமேற்றிருந்த நடிகையைக் காட்டி இது என்ன வேடம்? என்றாராம். கடவுள் வேடம் என்றதும். அதற்கு நல்ல ஒழுக்க மான பெண்களே கிடையாதா? இந்த நடிகை இநதியாவில் என்னோடு கம்பெனி(?) கொடுத்தவர் என்றாரம் தொழிலதிபரான நண்பர். அந்த இழிவைப் பொறுக்க முடியாமல் தான் வழக்குப் போடப் போகிறாராம். இதுதான் சாக்கென்று இந்து முன்னணி வகையராக்களும் பேட்டி கொடுக்கிறதுகள். சரி, நடிகைகள் ஒழுக்கமானவர்களா? ஒழுக்கம

பெரியார் திரை குறும்படப் போட்டி 2009

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டி க்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு: ரூ.10000/- இரண்டாம் பரிசு: ரூ.5000/- மூன்றாம் பரிசு: ரூ.3000/- போட்டிக்கான விதிமுறைகள்: 1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும். 2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்(Subtitles) இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். 3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். 4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். 5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos) மற்றும் இ