முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!

சிப்பிகள் பொறுக்க வந்தோம் சிதைகள் தந்தாய் - எங்கள் கடல் தமிழர் வாழ்க்கை இன்று புதை குழி மண்ணாய்! கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் கிடைப்பது கடினம்; கடல்நீர் நாட்டுள் பயணம் வந்தது வடிந்தது எங்கள் உதிரம்! நாட்டுக்குள் பூகம்பம் வந்தது மக்கள் கடற்கரை சென்றனர். கடலுக்குள் பூகம்பம் வந்தது கடற்கரையே காணாமல் போனது! உயிரைப் பணயம் வைத்தோர் உயிருடன் வந்தனர் - தங்கள் உறவுகள் காவு போனதைக் கண்டதும் வெந்தனர்! கடல் என்னும் கந்துவட்டிக்காரன் பணயப் பொருளை மாற்றி கைக்கொண்டான்! தடைச் சட்டம் போட ஆளில்லை - கடல் தடைக்கெல்லாம் தயங்குகிற ஆளில்லை! இது மனித குலத்தின் மீது எல்லை தாண்டிய பயங்கரவாதம்! இயற்கை என்ன செய்யும் பாவம்? ஆழ்துளை போட்டான் அணுகுண்டு வீசினான் கடற்கரைக் காடுகள் அழித்து களியாட்ட விடுதிகள் கட்டினான் நீரை உறிஞ்சினான் நிலத்தடியில் வறட்சி.. கோலா பாட்டில் குளிர்ச்சி! சுற்றுச்சூழலின் சூத்திரம் மாற்றினான்.. தற்கொலைத் தூதனைத் தானே தேடினான்! தன்னை கவனிக்காத மனிதனைத் தானும் கவனிக்கவில்லை இயற்கை! பயங்கரவாதி இயற்கையா? இல்லை மனிதன்! கொலை செய்தவன

இலவசக் கழிவறையும், சில கழிவுகளும்

மதுரை பேருந்து நிலையம் அருகில் நவீன இலவச கழிப்பிடம் ஒன்றைக் கட்டப்பட்டிருக்கிறது! அவரைப் பாராட்டுவதை விட்டுவிட்டு அழகிரி படம் இருப்பதைப் புகைப்படம் எடுத்துக் காட்டி கிண்டல் அடிக்கிறார் ஒருவர். அங்கே ராசா படம் வைக்கவேண்டும்; பெண்கள் பகுதிக்கு கனிமொழி, நீராராடியா என்று ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். வேலையத்த வெட்டிகளைப் போல உங்கள் அருவெறுப்பை இங்கே வந்து காட்டுவதா? http://www.facebook.com/photo. php?fbid=1693166976473&set=a. 1134458769117.21317. 1456758830&pid=1725248&id= 1456758830 கோடிகோடியாய்க் கோயிலுக்குக் கொட்டி அழுபவர்களும், திருவிழா, கொண்டாட்டம் என்று பாவக் கணக்கை தீர்க்க செலவு செய்து கொண்டிருப்பவர்களும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அப்படி நடக்கும் திருவிழாக்களில் கூட முறையாகக் கழிப்பிட வசதி செய்து கொடுக்காமல், போகும் வரும் இடங்களில் எல்லாம் அசுத்தம் செய்து ஊரையே கழிவறையாக்கிவிட்டுச் செல்லும் படி திருவிழா நடத்துகிற கோயில்களையும், அதன் மூலம் கொள்ளையடிக்கிற கும்பலையும் கண்டிக்க ஒருமுறையாவது உங்களுடைய விரல்கள் கணினியைத் தொட்டிருக்குமா? சுகாதரமற்ற குளங்களினாலும், கோவில

பாவாணர் துரோகியோ?

துரோகி முத்திரை குத்துவதற்கு இப்போது ஆதாரங்களையெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை. கலைஞரைப் பாராட்டி, வாழ்த்தி யார் பேசினாலும், அவர்களுக்கெல்லாம் ’துரோகி’ முத்திரை குத்தி குதூகலிப்பதுதான் தமிழ் தேசியத்தை வளர்க்கும் பணி என்றும், ஈழத்திற்கு செய்யும் பணி என்றும் கருதிக் கொண்டு இணையக் களங்களில் எண்ணற்றோர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கலைஞரை கரிகால் வளவனோடு ஒப்பிட்டு ’திராவிட ஞாயிறு’ *  பாவாணர் அவர்கள் பேசியிருப்பதைப் படித்ததும், அவருக்கும் துரோகி முத்திரை குத்திவிடுவார்களோ என்று பயமாய் இருக்கிறது.  திரவிட மொழி நூல் ஞாயிறு பாவாணர் பார்வையில் கலைஞர் ”கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தானோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது. அந்தக் கரிகால் வளவனும் காவிரி நாட்டிலேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான். அந்தப் பூம்புகாரை அவன் வளப்படுத்தினான். இவரும் இப்போது அதைப் புதுப்பித்து வருகின்றார்.... அவன் இளமையிலே பகைவராலே இடர்ப்பட்டுத் துன்பப்பட்டு அதிலிருந்து தப்பினான். அப்படியே இவரும் போன பொதுத் தேர்தலிலே (1971) எப்படியோ பகைவரிடத்தில் அகப்பட்டுத் தப்பினார்... அந்தக் க

என்னாச்சு பிளாக்கருக்கு? வலைப்பூ காணாமல் போச்சு :(

திடீர் திடீரென சில வலைப்பூக்கள் காணாமல் போகின்றன. என்னவென்று அந்தந்த வலைப் பதிவரைக் கேட்டபோது தான் அவரும் கவனித்தார். இவ்வாறு ”நீங்கள் தேடும் வலைப்பூவைக் காணவில்லை. நீங்கள் இவ்வலைப்பூவின் உரிமையாளரானால் கணக்கில் நுழைக” என்று பதில் வருகிறது. தனது கட்டுப்பாட்டகத்துக்குள் சென்று அவர் பார்த்த போது மேலும் அதிர்ச்சி. வலைப்பூ இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் காணாமல் போயிருக்கிறது. ஆனால், google தேடலில், cached இணைப்பில் முந்தைய பதிவுகள் கிடைக்கின்றன.  சரி, இது குறித்து Blogger-க்கு தெரிவிக்கலாம் என்றால், அங்கே ஒரு வாரமாக இது குறித்து முனங்கி முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. என்ன பிரச்சினை? என்ன செய்யலாம்? என்று  விவரம் தெரிந்தவர்கள் பாருங்கள். முடிந்தால் தமிழில் இது குறித்த விளக்கங்களைத் தாருங்கள். http://www.google.com/support/forum/p/blogger/label?lid=0271191b4249689a&hl=en இது போல பதிவுகளைத் தொலைத்தவர்கள் அங்கே போய் முறையிடுங்கள். அவர்கள் தீர்வை முன்மொழியும் போது மின்னஞ்சலில் அது குறித்த தகவல் கிடைக்க வழியேற்படும்.  அப்புறம் என்னை மாதிரி பல பதிவுகள் வைத்திருப்போர், ச

விதையாக விழுந்தவர்கள் உரமாக மாறுவர்!

எவன் சொன்னான் தமிழீழம் மண்ணில் புதைந்ததென? மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டதென? துயிலும் இல்லங்களைத் துடைத்தெறிந்தோம்.. துகிலுரிக்கப்பட்ட உன் தமிழச்சி போலென‌ கொக்கரிக்கட்டும் சிங்களம் செருக்குடன்! கல்லறைகளில் மட்டுமா வீரர்கள் உறைந்தனர்! தமிழீழ மண்ணெங்கும் காற்றாய் நிறைந்தனர்! இன்று அவ்வில்லங்கள் இணையத்தில்.. என்றும் அவ்வில்லங்கள் இதயத்தில்...! புரட்டிப் போடட்டும் வீரம் விதைத்த மண்ணை! வரலாறு மறக்காது விதைகளின் எண்ணை! போயிற்று களம் என‌ அழுவது வீணடா! ஒரு போகம் விளைந்ததும் உழுவது ஏனடா? உனக்குமா தெரியாது உழவின் அரிச்சுவடி? நல்லேரைக் கொண்டுழுது அடிமண்ணை மேலெழுப்பி சத்தாக்குவோம்! நெல் வேரை உரமாக்கி விளைச்சலுக்கு அதனையே சொத்தாக்குவோம்! அன்று நாம் விதைத்தோம்! அவன் அறுத்தான்!! முதல் போகம் முடிந்தது! இன்று.. அறுத்தவன் உழுகிறான் இனி... நாம் விதைப்போம்.. நாம் அறுப்போம்! விதையாக விழுந்தவர்கள் உரமாக மாறுவர்! உறுதியாய் நம் தமிழர் தமிழீழம் காணுவர்!

குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிப்பேன் - மத்திய அமைச்சர் ஆ.இராசா

சென்னை, நவ. 14- தொலைத் தொடர்புத் துறையில் மாறுதலை விரும்பாதவர்கள் ஒன்று சேர்ந்து என்மீது களங்கம் கற்பிக்க முனைந் துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ஆ. இராசா இந்து நாளித ழுக்கு அளித்த பேட் டியில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: கேள்வி:  2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, புதிய நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கியது, உரிம நிபந்தனைகளில் மாற்றம் செய்தது ஆகியவை காரணமாக அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று இந்திய உயர் தணிக்கை அதிகாரியின், தணிக்கை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது என்ற செய்தி கசிந்திருக்கிறது. இதனைப் பற்றி நீங்கள் விளக்கமுடியுமா? ஆ.இராசா : எழுப் பப்பட்டுள்ள பிரச் சினைகளை இரு வகை களாகப் பிரிக்கலாம். முதலாவது, அரசாங் கத்துக்கு இழப்பு ஏற் பட்டதாகக் கூறப்படு வது. அடுத்தது நடை முறையில் தவறுகள் ஏற்பட்டது என்று கூறப்படுவது. 1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை மத்திய அமைச்சரவை யால் ஏற்றுக் கொள் ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடா ளுமன்றம் பின்னேற்பு வழங்கப்பட்டு உள் ளது. ஏலம் வழியான நடை முறையிலிருந்து(NTP 94) வருவாய் பங் கீடு நடைமுறைக்கு (NTP 99) மாறுவதற்கு இந்த

தமிழில் சமஸ்கிருதத் திணிப்பா? - தமிழர் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை

தமிழ் யூனிகோட் முறையில் சமஸ்கிருத கிரந்த எழுத்துகளைத் திணிக்க முயற்சிக்கும் பார்ப்பன முயற்சி குறித்துக் கண்டனம் தெரிவித்தும், தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்தும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை பின்வருமாறு: முதல்வரின் முக்கிய கவனத்துக்கு... ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள்  பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்!! யுனிகோட் (Unicode)  எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையதளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் (Download) இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம். தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்து

இணையத் தமிழை சமஸ்கிருத மயமாக்க முயற்சி! - ஆரிய நரிகள் மீண்டும் வாலாட்டம்

கணினித்துறை, இணையம் இவற்றில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் வளர்ச்சி கண்டு வருவது தமிழ்தான். அதிலும் ஒருங்குறி எனப்படும் யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துகள் வந்தபிறகு எண்ணற்ற இணையதளங்கள் பழந்தமிழ் இலக்கியங்களையும், புதிய படைப்புகளையும் கொண்டும் அறிவியல் கருத்துகளை எளிய தமிழில் தந்து வருகின்றன. இதை எவ்விதத் தடங்கலுமின்றி, உலகின் எந்த மூலையிலிருந்தும் எழுத்துரு (Font) தடையின்றி படிக்கலாம்; எழுதலாம். கூகிள், விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் யூனிகோட் தமிழை அங்கீகரித்து தங்களது மென்பொருள்களிலும் இவற்றை பயன்படுத்திவருகின்றனர். ஏற்கெனவே தமிழுக்கென உலக அளவிலான யூனிகோட் ஒதுக்கீட்டில் 128 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதை அதிகப்படுத்தி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் இடம் கிடைத்தால் தான் எளிமையாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெறும் . இதற்காக யூனிகோட் சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கணினித் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தமிழ் எழுத்துகளுடன், வழக்கத்தில் இருக்கும் கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளுக்க

மருத்துவர் வாழ்க! மருத்துவம் ஒழிக!

இந்நேரம் செத்துச் சுண்ணாம்பு ஆகியிருக்க வேண்டிய நான் இன்று எல்லா சுகங்களுடன் சென்னையில் கணினியின் முன் உட்கார்ந்து உங்களோடு மருத்துவத்தை விமர்சிக்கக் கூட காரணமான அந்த மருத்துவரின் பிறந்தநாளில் அவரை நன்றி விசுவாசத்துடன் நினைவு கூர்ந்து தான் கூறுகிறேன், நாம் மருத்துவத்தால் அழிந்தோம்.  உயிரைக் கொல்வோரை காவு கொடுப்போரை  மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!  வானம் உள்ளவரை வையம் உள்ளவரை  யார் இங்கு மறப்பார் மருத்துவரை! ---------------------------------------------------------------- இப்படி திடீரென்று சம்மந்தமே இல்லாமல் எனது Status Message-அய் பார்த்த நண்பர்கள் கொஞ்சம் பதறித்தான் போனார்கள்.. என்னாச்சு என்று! காரணம் முதல் வரியைப் படித்ததோடு பேசியவர்கள், Chat-இல் கேட்டவர்கள் அனைவரும் என் உடல் நிலையைப் பற்றியும், முழுவதும் பொறுமையாக படித்தவர்கள் என் குழப்பம் குறித்தும் கேட்டார்கள். அனைவரின் அக்கறைக்கும் நன்றியுடையேன். இப்படி திடீரென்று சம்மந்தமே இல்லாமல் நான்  Status Message போடக் காரணமும் இல்லாமல் இல்லை. எனது நண்பர் சேனா.பானா- வின்  Status Message-க்கு நான் போட்ட  Status Message எவ்வளவோ தேவலாம்

காலமெல்லாம் கல்லூரி மாணவன் - நடிகர் முரளி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

காலையில் சேதி கேட்டதிலிருந்து, அதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவிக்கிறது மனம். யாரிடம் பகிர்ந்தாலாவது ஆறுதல் அடையுமா எனப் பார்க்கிறேன்.. முடியவில்லை...! முரளி... நடிகர் தான்.. ஆயினும், அதையும் தாண்டி அவரை நமக்கு நெருக்கமாக உணர வைக்கும் கூறுகள் நிறையவே உண்டு. பக்கத்து வீட்டுப் பையன் போன்ற அவருடைய உருவ அமைப்பாக இருக்கலாம்.. அமைதியானவராகவே நாம் பார்த்துள்ள அவரது கதாபாத்திரங்களாக இருக்கலாம்... நிறைய எழுதத் தோன்றுகிறது.. பிறகு எழுதுகிறேன்...

தெலுங்கு மொழி பெரியார் திரைப்படம் பெயர் சூட்டல்- ஒரு விளக்கம்

பெரியார் திரைப்படம் தெலுங்கில் மொழியாக்கம் பெற்று ஆந்திர மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ள நிலையில் தெலுங்கு படத்திற்கு "பெரியார்-ராமசாமி நாயக்கர்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெரியாருக்கு தமிழ் நாட்டில் முளைக்காத நாயக்கர் பட்டம் ஆந்திராவில் மட்டும் முளைத்தது எப்படி? எனும் விமர்சனப் போக்கு நிலவுகிறது. விமர்சனங்களை படிப்பவர்களுக்கு நியாயம்போலக்கூட அது தோன்றலாம். தமிழில் பெரியார் திரைப்படத்தினை லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரித்தனர். தெலுங்கு மொழியாக்க படத்தினை 'நாக் எண்டர்பிரைசஸ்' எனும் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் தெலுங்கு மொழியாக்க படத்தினை ஏற்கெனவே ஆந்திரத்தில் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் இது. மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து சற்று வேறுபட்டு லாபநோக்கினை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ல இது. பெரியார் தெலுங்கு பட முன்னோட்ட நிகழ்ச்சி அய்தராபாத் நகரில் நடைபெற்ற பொழுது தெலுங்கு படத்தின் பெயர் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் ஞான.ராஜசேரன் அய்.ஏ.எஸ் உடன் இருந்தார். வ

தளிர்கள் கருகிய அமாவாசை தினத்தில்...

வேகாத வெய்யிலுல நான்           வெறகு வித்துப் படிக்க வச்சேன்..! வெந்துபோன வெறகா உன்னை           தூக்கவா அனுப்பி வச்சேன்? வெய்யிலிலே நீ நின்னா           கால் வெந்து போகுமுன்னு... வெளியவே வராதேன்னு           வீட்டுக்குள்ள நான் வளர்த்தேன். கால் கடுக்க நீ நின்னா           என் காலு எரியுமடி - இப்ப கரிக்கட்டையா கிடக்குறியே           என் உசுரு வேகுதடி! சுடு சோறு வேணுமின்ன...!           புதுச் சட்டி வாங்கச் சொன்ன..! சுடு சோறு திங்கலியே...!           சூடு தான் தாங்கலியோ...? வாங்கித் தந்த புதுச்சட்டி           வாய்பிளந்து கிடக்குதடி.. -உன்ன தூங்க வச்சுப் பார்த்த தூளி           தூக்கிப்போக உதவுதடி! .....தளிர்கள் கருகிய அமாவாசை தினத்தில்...(16.07.2004) ------------------------------------------------------------------ கருகிய தளிர்களை தூளியில் வைத்துத் தூக்கிப் போன கொடுமையும், சிதறியிருந்த மதிய உணவோடு கிடந்த புதுச் சட்டியும் நிழற்படங்களாகவும் காட்சிகளாகவும் கண்ட கொடுமையான நாளில் என்னோடு சேர்ந்து என் பேனாவும் அழுதது.. அன்று எழுதிய வரிகள்.. ஆறு ஆண்டு

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...) -2

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...) - முதல் பகுதி 5. இன்று தமிழ், தமிழர் என்றெல்லாம் புதிதாய்ப் புறப்பட்டிருப்போரே, கொஞ்சம் யோசியுங்கள். உங்களுக்கு, உங்கள் தந்தைக்கு, உங்கள் பாட்டனுக்கு ’நான் தமிழன்’ என்று உணர்த்தியது எது - திராவிட இயக்ககள் மேடையல்லவா? ’வந்தே மாதரம்’ என்று சொன்ன வாய்களை ’வாழ்க தமிழ்’ என்று சொல்ல வைத்தது யார்? திராவிட இயக்கம் தானே தமிழுணர்வை, தமிழன் என்ற சிந்தனையை, இன்றும் பலர் சொல்வது போல் தமிழனின் பழம் பெருமையை தமிழருக்கு உணர்த்தியது யார்? ஊர்தோறும் மாநாடுகளை, வீதிதோறும் விளக்கக் கூட்டங்களை, கலை நிகழ்ச்சிகளை, நாடகத்தை, திரைப்படத்தை, நாளிதழ்களை,  ஏடுகளைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்தது யார்? 6. தமிழ்ச்செல்வி, தமிழ்ச் செல்வன், தமிழ்மொழி, அமுதத் தமிழ், செந்தமிழ்... இப்படி ஒரு மொழியின் பெயரையே தங்கள் பெயராகச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு தமிழ் உணர்வை ஊட்டியது திராவிட இயக்கம் என்பதை மறுக்க முடியுமா? நாடெங்கும் நல்ல தமிழைப் பேசு மொழியாக்கியது யார்? 7. ”’வணக்கம் தோழரே’ என்று சொல்லாதீர்கள்; ’வணக்கம் தமிழரே!’ என்று சொல்லுங்கள்” என்று தோழமை உணர்வ

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...)

ஈழத் தமிழர் படுகொலை நடந்து ஓராண்டிற்குள் உலகத் தமிழ் மாநாடு கொண்டாட்டமா? என்று கேட்டவர்கள் யாரும் பெட்னா விழா குறித்தெல்லாம் கேள்வி எழுப்பவில்லை. பங்கெடுக்காமலும் போய்விடவில்லை. ஜூன் 27-க்கும் ஜூலை 3-க்கும் ஒரு வேளை ஆண்டுக்கணக்கில் வித்தியாசம் இருக்குமோ என்னமோ தெரியவில்லை. ஆனால் கடந்த ஆண்டும் பெட்னா விழா நடத்தப்பட்டிருப்பதையும் அதில் தமிழ்த்திரை நடிகர்கள் உள்ளிட்டோர் பங்கெடுத்ததையும் காணொளிகள் வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கண்டேன்.   லக்கி தான் இது குறித்து ஏற்கெனவே கேள்வி எழுப்பினார் என்று கருதுகிறேன். இதனால் நாம் ஏதோ பெட்னா நடைபெற்றதைக் குறை கூறுவதாக எண்ண வேண்டாம். தமிழர்கள் தமிழர்களாக எங்கு ஒன்று கூடினாலும், எப்போது ஒன்று கூடினாலும் அதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், அதனால் கிஞ்சிற்றேனும் பயன் விளையும் என்ற நம்பிக்கையும் நிச்சயம் உண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வும் கூட அவசியமான ஒன்றே! ஆனால் அது போன்ற ஒன்றுகூடல் தமிழகத்தில் கலைஞரால் நடத்தப்படக்கூடாது என்றவர்களுக்கு மட்டுமே நமது கேள்விகள். போகட்டும். வெற்றிகரமாக செம்மொழி மாநாடு முடிந்துவிட்டது. அதை நே