முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

380 கோடி செலவு! - அப்படித்தான் செய்வோம் போங்கடா!

“ஈழத்தமிழர்கள் செத்து மடிந்த வேளையில் செம்மொழி மாநாடா?” ”உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கிறோம்” சொன்னார்கள். ஒப்புக் கொள்ள முடியவில்லை; புரிந்துகொள்கிறோம். அவர்களுக்குப் புரிந்தது அவ்வளவுதான். ”சொரணையற்றவர்கள் தான் செம்மறி மாநாட்டுக்குப் போவார்கள்” என்றார்கள். செம்மொழியாம் எம்மொழியை செம்மறி என்று சொல்ல தமிழின் பேராலேயே அவர்களுக்குத் துணிவிருப்பதையும், அவலை நினைத்து உரலை இடிப்பதுபோலும், குளத்தோடு கோபித்துக் கொண்டு.. கழுவாமல் போவதைப் போலும் திரிவதைப் பெருமையென எண்ணும் மூடத்தனத்தையும் எண்ணி நகைக்கவில்லை.. வருந்தினோம். தமிழன்னைக்கு எடுக்கும் விழாவில் கலந்துகொண்டால் அந்த’ம்மா’வின் கோபத்திற்காளாக வேண்டியிருக்குமே என்று கலந்துகொள்வதைத் தவிர்த்து வீராவேச அறிக்கை விட்டவர்களின் கூட்டணிப் பயத்தை உறுதிப்படுத்திக் கொண்டோம். எழுச்சியான தமிழர் கூட்டத்தை நெறியாக அரசியல்படுத்தாமல், உணர்ச்சியை தூண்டினால் போதும் என்று அரசியல் 'கட்சி'யாக்கி, ஏறி வந்த ஏணியை உதைப்பார் போலும், ஓட்டை ஓடத்தில் பயணம் போவார் போலும், அடிமரத்தை வெட்டும் நுனிமரம் ஏறினார் போல் தமிழுணர்வை மக்களுக்கு உண்ட

செம்மொழி மாநாடு - சிறப்பு வலைப்பூ!

வணக்கம். வலைப்பூ நண்பர்களே! வாசகர்களே! (அப்படி யாருமிருந்தால்... :P) செம்மொழி மாநாட்டுக்கு ஊடகக்காரனாக பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். அலுவலகப் பூர்வமாக எமது நிறுவனத்துக்கு அனுப்பும் தகவல்கள் மற்றும் சிறப்புச் செய்திகளை, மாநாட்டு வளாகத்திலிருந்தபடி, உலகெங்கும் வாழும் தமிழினப் பெருமக்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்ற உணர்வின் காரணமாக... வேறு என்ன செய்ய முடியும்? இன்று வலைப்பூ ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். * செய்திகள் கிடைத்தவரை... (சில, பல தளங்களிலிருந்து சுட்டும் கூட...) * கூடிய மட்டும் புகைப்படங்கள் (நான் எடுத்தாலும், பிறர் எடுத்தாலும்...) * முடிந்தால் ஒலியும், ஒளியும் * நமது விமர்சனம், கட்டுரைகள், கருத்துகள்.... இன்னும்... ரொம்ப பிலிம் காட்டாதேங்குறீங்களா... அதனால் தான் பிளாக் காட்டுறேன்.. பாருங்க... http://thamizhchemmozhi.blogspot.com/ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா...

செம்மொழி மாநாட்டுக்கு எம் ஆதரவு என்றும் உண்டு! - புலிகள் அறிக்கை

தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தினர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ---------------------------------------------------------------------------------- தலைமைச் செயலகம், தழிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 15-06-2010 தலைவர்/துணைத்தலைவர்கள், தலைமைக்குழு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம். தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 – 23 நாட்களில் நடாத்தப்பட்டது. அதன் இரண்

ஈழத் தமிழர் உரிமை பெற்றிட செம்மொழி மாநாடு நல்ல துவக்கம்!

தமிழினத்துக்கு எதிரான ஜெ கூட்டத்தை மக்கள் அடையாளம் காண்பர் ஈழத் தமிழர், உலகத் தமிழர் உரிமை பெற்றிட உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - இனமானத் திருவிழா - நல்ல துவக்கம்! தமிழர் தலைவர் கி.வீரமணி அறிக்கை சென்னை, ஜூன் 20- ஈழத் தமிழர், உலகத் தமிழர் இனம் உரிமை பெற்றிட உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு நல்ல துவக்கம். எதற்கெடுத்தாலும் போராட்டம், சேற்றை வாரி இறைப்பது, ஈழத் தமிழர் பிரச்சினை வரை நாகரிகமில்லாமல் நடந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டத்தினரையும் மக்கள் அடையாளம் காண்பர் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் அவரது அறிக்கை வருமாறு: எதிர்க்கட்சித் தலைவர் - அவரது கூட்டத்தார்! பைத்தியக்காரனுக்கு கள் ஊற்றியதுபோல்... தமிழ்நாட்டு அறிக்கைத் தலைவியாகக் காட்சியளித்து நாளுக்கொரு போராட்டத்தை, மலையேறிய நிலையிலும் நடத்திடும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அவரது கூட்டத்தாருக்கும், கோவையில் முதலாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற விருப்பதையும், உலக முழுவதிலும் உள்ள நல்ல தமிழ் நெஞ்சங்கள்

மீள் நினைவுகள்!

தினசரி ஒரு பதிவு போட வேண்டும் என்பதற்காக மீள்பதிவு போடும் பழக்கம் எல்லாம் எனக்குக் கிடையாது. இதுவரையிலும் ஒன்றோ இரண்டோ மீள்பதிவாகியிருக்கலாம்.. சரி.. இப்போதெதற்கு அதெல்லாம்? மீள்பதிவு போடப் போகிறாயா என்கிறீர்களா? ஆம். அதே தான். ஆனால், மீள் பதிவாக அல்ல. மீள் நினைவாக! மெல்ல மெல்ல பருவம் மாறத் தொடங்கி மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் அதற்குப் பயந்து வெளியில் போகாமலா இருகக் முடிகிறது. போய்த்தான் ஆக வேண்டும். அப்படி போனபோது இரண்டு மீள் நினைவுகள். ஒன்று பின்னால் வருபவருக்கு பூமாரி பொழிவது போல் சகதியை அள்ளி வீசி வரும் இரு சக்கர வாகனங்கள் பற்றியது. கொஞ்சமும் கவலை இல்லாமல் குட்டியூண்டு Mud guard வைத்துக் கொண்டு, பூவாளியில் தெளிப்பதுபோல் சாலையில் ஓடும் மழை நீரை, கழிவு நீரை, சகதியை என்று சகலத்தையும் வாரி இறைக்கிறார்கள் வாகன ஓட்டிகள். Mud guard-க்குக் கீழ் சாணிமேட் மாட்ட வேண்டுமென்று நம்மவர்களுக்கும் தோன்றுவதில்லை; வண்டிகளிலும் அதற்கு வாய்ப்பு இல்லை. இது குறித்து அனைவரும், உள்ளாட்சி, போக்குவரத்து நிர்வாகங்களும் கொஞ்சம் சிந்தித்தால் நல்லது. இரண்டாவது, விழுப்புண்கள்

பச்சை வேட்டைக்கெதிராய் அருந்ததி ராய் முழக்கம்! - காணொளி

சென்னை தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் பள்ளியில் நடைபெற்ற “பச்சை வேட்டை”க்கெதிரான கூட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் உரை மற்றும் மக்கள் மீதான இந்தியாவின் போரைக் கண்டித்து பாடல்! நன்றி: www.easylive.tv