முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தளிர்கள் கருகிய அமாவாசை தினத்தில்...

வேகாத வெய்யிலுல நான்           வெறகு வித்துப் படிக்க வச்சேன்..! வெந்துபோன வெறகா உன்னை           தூக்கவா அனுப்பி வச்சேன்? வெய்யிலிலே நீ நின்னா           கால் வெந்து போகுமுன்னு... வெளியவே வராதேன்னு           வீட்டுக்குள்ள நான் வளர்த்தேன். கால் கடுக்க நீ நின்னா           என் காலு எரியுமடி - இப்ப கரிக்கட்டையா கிடக்குறியே           என் உசுரு வேகுதடி! சுடு சோறு வேணுமின்ன...!           புதுச் சட்டி வாங்கச் சொன்ன..! சுடு சோறு திங்கலியே...!           சூடு தான் தாங்கலியோ...? வாங்கித் தந்த புதுச்சட்டி           வாய்பிளந்து கிடக்குதடி.. -உன்ன தூங்க வச்சுப் பார்த்த தூளி           தூக்கிப்போக உதவுதடி! .....தளிர்கள் கருகிய அமாவாசை தினத்தில்...(16.07.2004) ------------------------------------------------------------------ கருகிய தளிர்களை தூளியில் வைத்துத் தூக்கிப் போன கொடுமையும், சிதறியிருந்த மதிய உணவோடு கிடந்த புதுச் சட்டியும் நிழற்படங்களாகவும் காட்சிகளாகவும் கண்ட கொடுமையான நாளில் என்னோடு சேர்ந்து என் பேனாவும் அழுதது.. அன்று எழுதிய வரிகள்.. ஆறு ஆண்டு

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...) -2

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...) - முதல் பகுதி 5. இன்று தமிழ், தமிழர் என்றெல்லாம் புதிதாய்ப் புறப்பட்டிருப்போரே, கொஞ்சம் யோசியுங்கள். உங்களுக்கு, உங்கள் தந்தைக்கு, உங்கள் பாட்டனுக்கு ’நான் தமிழன்’ என்று உணர்த்தியது எது - திராவிட இயக்ககள் மேடையல்லவா? ’வந்தே மாதரம்’ என்று சொன்ன வாய்களை ’வாழ்க தமிழ்’ என்று சொல்ல வைத்தது யார்? திராவிட இயக்கம் தானே தமிழுணர்வை, தமிழன் என்ற சிந்தனையை, இன்றும் பலர் சொல்வது போல் தமிழனின் பழம் பெருமையை தமிழருக்கு உணர்த்தியது யார்? ஊர்தோறும் மாநாடுகளை, வீதிதோறும் விளக்கக் கூட்டங்களை, கலை நிகழ்ச்சிகளை, நாடகத்தை, திரைப்படத்தை, நாளிதழ்களை,  ஏடுகளைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்தது யார்? 6. தமிழ்ச்செல்வி, தமிழ்ச் செல்வன், தமிழ்மொழி, அமுதத் தமிழ், செந்தமிழ்... இப்படி ஒரு மொழியின் பெயரையே தங்கள் பெயராகச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு தமிழ் உணர்வை ஊட்டியது திராவிட இயக்கம் என்பதை மறுக்க முடியுமா? நாடெங்கும் நல்ல தமிழைப் பேசு மொழியாக்கியது யார்? 7. ”’வணக்கம் தோழரே’ என்று சொல்லாதீர்கள்; ’வணக்கம் தமிழரே!’ என்று சொல்லுங்கள்” என்று தோழமை உணர்வ

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...)

ஈழத் தமிழர் படுகொலை நடந்து ஓராண்டிற்குள் உலகத் தமிழ் மாநாடு கொண்டாட்டமா? என்று கேட்டவர்கள் யாரும் பெட்னா விழா குறித்தெல்லாம் கேள்வி எழுப்பவில்லை. பங்கெடுக்காமலும் போய்விடவில்லை. ஜூன் 27-க்கும் ஜூலை 3-க்கும் ஒரு வேளை ஆண்டுக்கணக்கில் வித்தியாசம் இருக்குமோ என்னமோ தெரியவில்லை. ஆனால் கடந்த ஆண்டும் பெட்னா விழா நடத்தப்பட்டிருப்பதையும் அதில் தமிழ்த்திரை நடிகர்கள் உள்ளிட்டோர் பங்கெடுத்ததையும் காணொளிகள் வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கண்டேன்.   லக்கி தான் இது குறித்து ஏற்கெனவே கேள்வி எழுப்பினார் என்று கருதுகிறேன். இதனால் நாம் ஏதோ பெட்னா நடைபெற்றதைக் குறை கூறுவதாக எண்ண வேண்டாம். தமிழர்கள் தமிழர்களாக எங்கு ஒன்று கூடினாலும், எப்போது ஒன்று கூடினாலும் அதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், அதனால் கிஞ்சிற்றேனும் பயன் விளையும் என்ற நம்பிக்கையும் நிச்சயம் உண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வும் கூட அவசியமான ஒன்றே! ஆனால் அது போன்ற ஒன்றுகூடல் தமிழகத்தில் கலைஞரால் நடத்தப்படக்கூடாது என்றவர்களுக்கு மட்டுமே நமது கேள்விகள். போகட்டும். வெற்றிகரமாக செம்மொழி மாநாடு முடிந்துவிட்டது. அதை நே
கருணாநிதிக்கு கோயில் கட்டியவரே அகற்றினார்! First Published :  02 Jul 2010 12:51:51 PM IST குடியாத்தம், ஜூலை 1: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே முதல்வர் கருணாநிதிக்கு கோயில் கட்டிய திமுக தொண்டரே வியாழக்கிழமை அவரது சிலையை அங்கிருந்து அகற்றினார்.  கட்சித் தலைமையில் இருந்து வந்த உத்தரவையொட்டி, அவர் சிலையை அகற்றியதாகக் கூறப்பட்டது.  குடியாத்தம் அருகே உள்ள பரதராமி அடுத்த சாமிரெட்டிபல்லி கிராமத்தில், ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான ஜி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் கருணாநிதிக்கு கோயில் அமைத்தார்.   தன் சொந்த நிலத்தில், சொந்த பணம் சுமார் ரூ. 2 லட்சம் செலவில் கட்டடம் கட்டி, அதில் கருணாநிதியின் இரண்டரை அடி உயர மார்பளவு சிலை வைக்கப்பட்டு, அறையின் முகப்பு சுவரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், திமுக மாவட்டச் செயலர் ஆர். காந்தி ஆகியோரின் படங்களும் பதிக்கப்பட்டிருந்தன.  இதுதொடர்பான செய்தி தினமணியில் புதன்கிழமை (ஜூன் 30) வெளியாகியிருந்தது.  இந்நிலையில், தனக்கு கட்டிய கோயிலை அகற்றுமாறு மாவட்ட

கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம்! - தமிழர் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள்

துரோகங்களைச் சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள் நாம்; அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம்! - தமிழர் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் இன்று (2.7.2010) காலை 7.30 மணியளவில் (சேத்துபட் ஆரணி அருகில்) ஒரு மண விழாவை நடத்தி வைக்க நான் வேனில் பயணமாகி, திருமணம் முடிந்தவுடன் புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு சென்னை திரும்பும் வழியில் எனக்கு ஒரு தகவல்: வீட்டில் இருந்த காவலாளியை சுற்றி 3 பேர் தடிகளுடன் நின்றிருக்க, மற்றும் 4 பேர் வீட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த எனது காரை இரும்புத் தடிகளால் அடித்து நொறுக்கி, 'ஒழிக!' என்று கோஷங்கள் போட்டுக்கொண்டிருந்தனராம். அதற்கு சற்றுமுன், வீட்டிற்கு வந்த பெரியார் திடல் நிருவாகி சீதாராமன் அவர்கள் எனக்காக காத்திருந்தபோது, வீட்டில் வேலை செய்யும் பெண் மேலே இருந்து பார்த்து, காரை அடித்து நொறுக்குகிறார்கள் என்று கூச்சல் போட்டவுடன், உள்ளே இருந்த குடும்பத்தினர், நிருவாகி சீதாராமன் கீழே இறங்கி வருவதற்குள், அந்தக் கும்பல் ஓடி சாலையின் குறுக்கே கடந்து சென்றுள்ளது. காவல்துறையினர் விரைந்து வந்து முழு விசாரணையை நடத்துகின்றனர். பல வெள