முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எதற்காக டெல்லியில் குண்டுவெடித்தது?

வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் போலவே, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இன்றைய பேசு பொருளாக டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பே இருந்தது! நீதி கிடைக்குமென நம்பி சாதாரண மக்களும், நீதியை ’வாங்கு’வதற்கென சிலருமாகப் பொதுமக்கள் குழுமியிருக்கும் இடத்தில் நடத்தப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பு கடுமையான கண்டனத்திற்குரியது தான். நீதிமன்றத்திற்குள்  குத்து, வெட்டு, கொலை நடப்பதை நம்மூரில் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவின் தலைநகரல்லவா? குண்டு வெடித்திருக்கிறது. கடும் கண்டனத்திற்குரிய இந்நிகழ்வை யாரும், எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்க முடியாது. இதற்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமா? அலட்சியம் காரணமா? CCTV கேமராக்கள் இல்லாத்தற்குக் காரணம் யார்? சகல திறமையும் பொருந்திய நமது இராணுவம், காவல்துறை இவற்றைவிட தீவிரவாதிகள் பெரியவர்களா? உளவுத்துறை என்ன செய்கிறது? இப்படி எண்ணற்ற கேள்விகள் எல்லா ஊடகங்களாலும் கேட்கப்பட்டன. புதிய தலைமுறை நிகழ்ச்சியிலும் கேட்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொள்ள ஓய்வுபெற்ற இந்திய இராணுவ உளவுப்பிரிவைச் சேர்ந்த கர்னல் ஹரிஹரன் என்பவரும், இதழாளர் பகவான் சிங்-கு