முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முகநூலில் ‘தேசீயவாதி’ ஆவது எப்படி?

தேவையான பொருட்கள்: 1. இந்திய தேசியக் கொடியின் படங்கள் சில. 2. கொடியின் வண்ணங்கள் கூடப் போதுமானது. அதிலும் குறிப்பாக ’வந்தே மாதரம்’ பாடல் டிசைனில் உள்ளது போன்ற நடுவில் அசோகச் சக்கரம் இல்லாத ஓவிய வடிவில் இருந்தால் இன்னும் உங்கள் தேசீய ‘கிரேடு’கூடும்!) 3. காந்தி, நேரு படம் பயன்படுத்தலாம். ஆனால் அதைப் பயன்படுத்தினால் காங்கிரஸ் சாயம் வந்துவிடும் ஆபத்து இருப்பதால், காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்-சின் இன்றைய அடையாளமான மோடி படத்தைப் பயன்படுத்தலாம். 4. அன்னா ஹசாரே, மதச்சார்பின்மையைக் காக்க அப்துல்கலாம் (வேறு எந்த முஸ்லிம் படமும் அனுமதியில்லை.) 5. ’பாரத் மாத்த்த்தா க்க்க்கீ ஜே!’, ’வந்த்த்தே மாத்த்தரம்’ போன்ற ரெடிமேட் ஸ்லோகங்கள் கொஞ்சம் போல வைத்துக் கொள்ளலாம். செய்முறை: இந்தியாவின் இண்டிபெண்டன்ஸ் டே, ரிபப்ளிக் டே (எது ஜனவரி 26, எது ஆகஸ்ட் 15 என்றெல்லாம் தெரியவேண்டியதில்லை.) என்று யாராவது சொல்லும் போதெல்லாம் மேற்காணும் படங்களில் ஒன்றைப் profile படமாகப் போட்டுவிட்டு, forward mail எதாவதிலிருந்து எடுத்து ஸ்டேடஸ் மெசேஜ் போடலாம்.. கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்த

தீபாவளியன்று வீட்டுக்கு வந்த பெரியார்

...... 1949க்குப் பிறகு அய்யா அவர்கள் எனது இல்லத்தில் தான் தங்குவார்கள் (காரைக்குடி வரும்போது) என்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும். ஒருமுறை 1950வாக்கில் தீபாவளி அன்று திடீரென்று பெரியார் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து விட்டார்கள். முதல் நாளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சி முடித்து மதுரை வந்த அய்யா மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு வந்து விட்டார்கள். நேராக எனது கடைக்கு முன் அய்யாவின் வேன் வந்து நின்றுள்ளது. நான் அந்த நேரம் கடையில் இல்லை. எனது மைத்துனர் தனுக்கோடிதான் கடையில் இருந்தார். அப்போது மதியம் 3-4 மணி இருக்கும். வந்தவுடன் "சாமி எங்கே?" என்று கேட்டதும், "வீட்டிலிருக்கிறார். இதோ கூட்டி வருகிறேன்" என்று கிளம்பியவரை நிறுத்திவிட்டு, அய்யா அவர்களே தனியாக கடை எதிரே உள்ள ஒரே நீளமான சந்தில் வருகிறார். (படம்:பெரியார் நடந்து வந்த சந்தின் இன்றைய தோற்றம்) (உள்படம்: என்.ஆர்.சாமியும், பேராண்டாள் அம்மையாரும், கையில் குழந்தையாக திராவிடச்செல்வம்) நான் கருப்புச்சட்டையுடன் எதிரே வருகிறேன். சற்று தூங்கிவிட்டு வருவதால் எனக்கே ஒரு சந்தே

மாசு அகற்றிய மாசு!

இந்தக் கட்டுரையை நான் எழுதத்தொடங்குகிற இந்த நொடியோ (11:59:14 - 20.10.2011), அல்லது எழுதத் தோன்றிய 16-ஆம் தேதி இரவோ எந்த விதத்திலும், பிரச்சாரத்திற்கோ ஒரு ஓட்டிற்கோ கூடப் பயன்படப் போவதில்லை; அந்த நோக்கமும் இல்லை. ஏன், எழுதும் நான், என் ஓட்டைக் கூடத் தர முடியாதவன்... சென்னை மாநகராட்சிக்கு! (காரைக்குடிக்குச் சென்று 19-ஆம் தேதி வாக்கிட்டுவிட்டு வந்துவிட்டேன்) வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் மீதான வெறுப்பையும் தாண்டி, மக்களின் ஆதரவு என்னும் பேரலை இவருக்குச் சாதகமாக இருப்பினும், சென்னை மாநகராட்சியை எப்பாடுபட்டேனும் கைப்பற்றியே தீருவது என்ற வெறியில், இவரது வெற்றி ஆளுங்கட்சியினரால் தட்டிப் பறிக்கப்படலாம். ஆனாலும் என் நன்றியைத் தெரிவிக்கும் நோக்கம் ஒன்றே என்னை எழுதத் தூண்டுகிறது. நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்காமல், மாநகராட்சி உறுப்பினர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முறை கடந்த 2006-ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. அப்படி சென்னை சைதையிலிருந்து தி.மு.க.வின் சார்பில் மாமன்ற உறுப்பினராகத் தேர்வாகி, பின்னர் மாநகரத் தந்தை ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மா.சு என்க

ராம்தேவை விட பெரிய தில்லாலங்கடி!

’சுடிதார் எஸ்கேப்’ புகழ் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது, அவரது பல படங்களையும் ஊடகங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தின. ஏற்கெனவே ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி வந்த ராம்தேவுக்கு இவை பெரிதும் பயன்பட்டன. அதில், மூச்சை நன்கு உள்ளிழுத்து, வயிற்றைக் குழி விழுந்தது போல் காட்டும் படம் கூட பெரிய அளவு பிரபலமாகவில்லை. காரணம், சிறுவயதில் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக வந்து, 2 ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு, மேஜிக் ஷோ செய்யும் எளிய வகை நிபுணர்கள் காட்டும் தண்ணீரை நிறையக் குடித்து பம்புசெட்டு போல வெளியே விடுதல், பேப்பர் மேஜிக் போன்ற வித்தைகளில் ஒன்றுதான் வயிற்றை உள்ளிழுத்துக் காட்டி வியப்பூட்டுவதும்! ஆனால், பிரபலமான மற்றொரு படம் - இரண்டு கால்களையும் பாம்புபோல் பின்னி நிற்கும் படமாகும். பல பேர் இதைப் பார்த்தே இவர் பெரிய யோகா வித்தகர், உண்மையான சாமியார் என்று பேசிக் கொண்டார்கள். அடப்பாவிகளா! நம்ம வைகைப் புயல் வடிவேலு, ”சிங்கார வேலன்” படத்திலேயே இந்த வேலையெல்லாம் காண்பிச்சுட்டுட்டாரே! அப்ப அவரையெல்லாம் ராம்தேவுக்கு முன்னோடின்னுல்ல சொல்லணும் என்று யோசித்துக் கொண்டேன