முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடைசி நேரத்தில் செயல்படாத TNPSC பதிவு எண்

இரவு 10:30 மணிக்கு ஒருவர் பெரியார் திடலுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். “சார், டி.என்.பி.எஸ்.சி-க்கு விண்ணப்பம் போடணும். இன்னிக்கு நைட் 11 மணி வரைக்கும் போடலாம்னாங்க... எனக்கு இங்க இண்டர்நெட் -டெல்லாம் கிடையாது சார். என் ஒன் டைம் நெம்பர வைச்சு விண்ணப்பம் போடணும் சார்” என்றார். யாருக்காவது போட்டு, இங்கே தப்பாக வந்துவிட்டதோ என்ற எண்ணத்துடன் “சார், நீங்க போட்டிருப்பது பெரியார் திடல் எண்ணுக்கு. இந்த விசயத்தில நான் என்ன பண்ணனும்னு எனக்குப் புரியல... எனக்கு அதைப் பற்றி விவரம் தெரியாது” என்றேன். “இல்ல சார்... டி.என்.பி.எஸ்.சி தொடர்பான எல்லா சந்தேகங்களையும் கேளுங்க-ன்னு இந்த நம்பர் பேப்பர்ல முன்னாடி வந்திருந்தது சார். அதை எடுத்து வச்சிருந்தேன் சார். நான் தர்மபுரி மாவட்டத்தில ஒரு கிராமத்தில இருக்கேன். டிஸ் ஏபில்டு சார்” என்றார். “சரிங்க... நீங்க சொல்ற பெரியார் பயிலக அலுவலகம் காலை 10 மணிக்கு தான் தொடங்கும். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. இருந்தாலும், என்னிடம் இணைய இணைப்பு இருக்கு.. என்ன செய்வதென்று நீங்கள் சொன்னால் நான் செய்து தருகிறேன்.” என்றேன். அவர் சொன்ன தகவல்கள் போதாமல்

’பார்ப்பனர்’ என்பது இழிவுச் சொல்லா?

அடிக்கடி எங்களிடம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று - “ஏன் பிராமணரை பார்ப்பான் / பார்ப்பனர் என்று அழைத்து இழிவு படுத்துகிறீர்கள்?” என்பது. அதற்கான வரலாற்றுக் காரணங்களையும், அது இழிவுச் சொல் அல்ல என்பதையும் தெளிவாக விளக்குகிறார் கட்டுரையாளர். முகநூலில் படித்தது... எப்போதும் பயன்படும் என்பதால் கட்டுரையாளரின் அனுமதியுடன் இங்கே பதிவு செய்யப்படுகிறது. ---------------------------------------------------------------------------------------------- பார்ப்பனரும் தொன்மங்களும் - மதிமன்னன் அ ருப்புக்கோட்டையில் ஓர் அரசுப்பணியாளர் மார்க்சிய அறிவுடன் சீரிய பகுத்தறிவாளர். தீவிர பெரியாரிஸ்ட். தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிகிறார். ஏதோ ஓர் அமைப்பின் சார்ப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப் போவதாகவும் அதில் நான் ” இந்தியா இவன் மதமா ? அவன் மதமா ? இந்தியா எவன் மதம் ?” என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றார்.அவர் எனக்கு அறிமுகமானவர் அல்லர். என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார். எங்காவதுபோய்ப் பேசிச் சிக்கலாகி விடக்கூடாது என்கிற , வழக்கமான பழக்கத்தில் அருப்புக்கோட்டை கழகத் தோழர் விடுதலை ஆதவனிடம் கேட்டேன்