முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காரட் போய்... கான்கிரீட் வந்தது

பெங்களூரில் இருக்கிறேன். இதை பெங்களூரு என்று சொன்னால் பெங்களூர் வாசிகள் ஏற்க மாட்டார்கள். அதன் புறநகர்ப் பகுதி - ஒயிட்ஃபீல்ட் அருகில்! வரிசையாக பெரும் பெரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக இருக்கும் பகுதியில் வசிக்கும் தங்கை வீட்டிலிருந்து பார்த்தால், பக்கத்தில் இருக்கும் நீளமான ஓரிடம் மட்டும் பச்சைப் பசேல் என்று இருக்கும். முழுக்கவே விவசாயம் இருந்த பகுதியில் பிளாட் போடப்பட்டது போக அந்த வால் போன்ற  நிலத்தில் தான் விவசாயம் நடைபெற்றுவந்ததாம். அதுவும் காரட் செடிகள். 4-ஆவது மாடியிலிருந்து பார்க்க குட்டி குட்டியாக மிக அழகாக இருக்கும். அந்த இடத்தை பலரும் விலைக்குக் கேட்டுவருவதாகவும், அதன் உரிமையாளர் மறுத்துவருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பொங்கலுக்காக இந்த முறை வந்து பார்க்கும்போது அதிர்ச்சி! அண்மையில் அதற்கு எதிர்ப் பகுதியில் கட்டப்பட்டுவரும் மற்றொரு அ.மா.கு-க்காக, அதன் பணியாளர்கள் தங்கும் பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது அந்த நிலம். தகரத் தகடுகள் வேயப்பட்ட குடிசைத் தொகுப்பாக இருக்கிறது அந்தப் பகுதி! வடநாட்டுப் பணியாளர்களும், பள்ளி என்றால் என்னவென்றே அறியாத அவர்களது குழந்தைகளுமாக நிர

மனிதநேய சமத்துவ விழா

திராவிடர் திருநாள் - தமிழர் திருநாள் - உழவர் திருநாள் என்று நாம் கொண்டாடும் பொங்கல் விழாவை நல்ல நேரம் பார்த்து, சூரியனுக்குப் படைத்து, கும்பிட்டு, சங்கராச்சாரி கும்பல் சங்கராந்தி என்று விளிக்க ஏதோ இந்து மதப் பண்டிகையைப் போல மாற்றிவிட்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு தான் கிறிஸ்துவ, இஸ்லாமியர்கள் பலரை பொங்கல் விழாவிலிருந்து விலகி நிற்கச் செய்திருக்கிறது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் சமத்துவப் பொங்கல் என்று கொண்டாடி அனைத்து மத நம்பிக்கையாளர்களான தமிழர்களும் கொண்டாடும் வண்ணம் செய்தார். இன்றும் கூட பல இடங்களில் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடியிருக்கிறார்கள். நாங்கள் பொங்கல் கொண்டாடுவோம் என்று சொல்லும்போது, என் சிறுபிள்ளையிலிருந்து பலரும் கேட்ட கேள்வி ‘நீங்க பொங்கல் கொண்டாடுவீங்களா?’ என்பது. அப்போது நாங்கள் சொல்லுவோம் “பொங்கல் மட்டும் தான் கொண்டாடுவோம். அது தான் எந்த மதமும் சாராதது. தமிழருக்கானது. உழைப்பின் உயர்வை நினைவூட்டுவது.” அவர்களின் கேள்வி - இது இந்து மதப் பண்டிகை என்ற எண்ணத்திலிருந்து எழுந்தது.  எனவே ஜாதி, மதம் சாராத மனிதநேய சமத்துவ விழாவாக வளர்த்தெடுப்பது தான் பொங்கலின் தனித்தன

வக்கீல் அவ்வாவுக்கு வீரவணக்கம்!

இயக்கம் தான் எங்களுக்குக் குடும்பம். தந்தை வழி தாய், தந்தையர் தான் நான் பார்த்து வளர்ந்த பாட்டி, தாத்தா. (தாய் வழி தாத்தா, பாட்டி எனக்கு நினைவு தெரியும் முன்பே மறைந்துவிட்டார்கள்) அவர்களைத் தவிர்த்து சிறு குழந்தை பருவத்திலிருந்து எனக்குத் தெரிந்த தாத்தா, பாட்டி என்றால் அது வக்கீல் தாத்தா, வக்கீல் பாட்டி தான். எங்கள் தாத்தா காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்கள் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் செயலாளர் என்றால் சிவகங்கை வக்கீல் சண்முகநாதன் அவர்கள் தான் மாவட்டத் தலைவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் கடுமையான எதிர்ப்பின் இடையே இயக்கத்தை வளர்ந்த பெரியார் தொண்டர்கள். இவர்கள் இருவருக்கும் ஈடுகொடுத்து உழைக்கச் சளைக்காத இருவர் என்றால் அது எங்கள் அவ்வா பேராண்டாள் அவர்களும் வக்கீல் அவ்வா இராமலக்குமி அவர்களும் தான். போராட்டக் களத்தில் நிற்கும் தங்கள் இணையர்களுக்குத் தோள்கொடுத்து குடும்பத்திலும், கழகத்திலும் தங்கள் பங்கைச் செலுத்தியவர்கள். போராட்டம், மாநாடுகள், இயக்கக் கூட்டங்கள் - எது என்றாலும் ஆபத்துக்கு அஞ்சாமல் போராடியவர்கள். காங்கிரசின் எதிர்ப்பை மீறித் தான் அத்தனை பொதுக்கூட்டங்களும், மாநாடுக

இன்னும் "இளமை இதோ இதோ"...

நான் அடிக்கடி சொல்வதுண்டு. இன்று புலர்ந்தபோது கூட அருகில் இருந்த தம்பியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்னும் "இளமை இதோ இதோ" பாடலை அடித்துக் கொள்ள ஒரு பாட்டு வரவில்லை என்று! அதே போன்று ஒரு தொகுப்பையே பதிவு செய்திருக்கிறார் நண்பர் Muralikannan Rengarajan. நிறைய முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், இளமை இதோ... தான் இன்னும் இளமையுடன்! இவ்வளவுக்கும் அப்பாடலின் தொடக்கத்தில் வரும் "ஹாய் எவ்ரி படி... விஷ் யூ ஹேப்பி நியு இயர்" என்ற வரிகளைத் தவிர புத்தாண்டுக்கும் அப்பாடலுக்கும் யாதொரு தொடர்பும் இருக்காது; கமல்ஹாசனின் பெருமை பேசும் பாடலாகத் தான் அது இருக்கும். ஓரிடத்தில் 'இந்தியிலும் பாடுவேன்' என்று எஸ்.பி.பி.யின் பெருமையும் உள்ளே வரும். ஆனாலும் நம் மனதில் அப்பாடல் நின்று நிலைப்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் என்பது சிந்திக்கத்தக்கது. ராஜாவின் துள்ளலான அதன் இசை அதற்கு முக்கியக் காரணம். பாடல் எங்கும் பாடுபவர் உற்சாகம் கொள்ளத்தக்க பாவனைகள் வெளிப்படும் (யார் பாடினாலும்). பைக், ஸ்கேட்டிங், டார்ஜான் மாதிரி கயிற்றில் தொங்குதல், ஆடுதல், ஒடுதல், தாவுதல் என்று