முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை! - புதுமையான மணமக்கள்

திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமின்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சிடி தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு,என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதை போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.) அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும் அப்படி செலவு செய்வதற்கும் அழகு படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் ஏதாவது இருக்குமா? ’இதெல்லாம் நடக்கிற காரியமாடா மண்டையா?’ என்று குப்பைக் கூடையில் போடுவதற்குச் சிரமமாக இருக்க

மார்க்கமும் மனிதமும்!

முகநூலில் தோழர் அபுராயன் எழுதிய பதிவு //சிந்திக்க மட்டும்...!!! நேற்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த சையத் சுபஹானிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என விஜய் டிவி தொகுப்பாளர் கேட்டதற்கு அவர் " எல்லா புகழும் இறைவனுக்கே" என்றார். அவரின் தாயாரிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் " என் மகனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்" என்று கூறி தலையை சற்று தாழ்த்தினார்... பிள்ளைகளைவிட பெற்றோர்களுக்கே இஸ்லாமிய மார்க்கம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைபடுகிறது... என்பதனை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியது... # இறைவனை தவிர எதற்கும் எவனுக்கும் தலைவனங்குவது மாபெரும் குற்றமாகும்...!!! - @ அபு ரயான் // அபுராயன் அவர்களின் பதிவில் தோழர் மதி மதி அவர்களின் கருத்து: //மகன் ஒரு பாடகராகத் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்; வெற்றி பெறும் அளவுக்கு தம் திறமையை வளர்த்து, தம் உழைப்பால் வெற்றிக்கனியைப் பறித்து விட்டார்; ஆனால், இதில் எந்த தொடர்புமில்லாத 'இறைவனுக்கு' நன்றி கூறுகிறார்! அறிவின் மீது நம்பிக்கையின்றி! ஆனால், அவரின்

இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?

சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்து பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னியாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுதீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்காண பொதுமக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவசமடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்ததாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துபட்டு சிறிஸ்தவ ஆ