முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேங்காய் உரிக்கும் இயந்திரம்

எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரங்கள். இரண்டுமே நான் நட்டவை! ஒன்று எதிர்வீட்டு பாண்டியுடனும், மற்றொன்று பக்கத்துவீட்டு திலக்குடனும் கூட்டணி வைத்து நட்டது என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைத் தொடும் எங்கள் வீட்டில் தென்னைக்கு எப்படியும் 18 வயதுக்குக் குறையாமல் இருக்கும். குறைந்த உயரத்திலேயே சுவையான இளநீரையும், தேவைப்படும்போது தேங்காய்களையும் தந்து கொண்டிருந்தன இரண்டு மரங்களும்! தொடக்கத்தில் அரிவாள் மூலம் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த எங்கள் அய்யா, பின்னர் தேங்காய் உரிப்பதற்கென்றே உள்ள கருவியை வாங்கி வந்தார். தொடக்கத்தில் ஆர்வத்துடன் அதில் தேங்காய்கள் உரிப்பதற்குத் தாவுவேன். எப்போதும் அய்யா தான் உரிப்பார். ஆனால், நாளடைவில் அதில் எனக்கு ஒருவித பயம் தோன்றத் தொடங்கியது. கையை வைத்து குத்தி, அழுத்தி, கம்பியை நிமிர்த்தினால், மட்டை பிய்ந்து வரும். கம்பியில் குத்தி அழுத்துவதில் கொஞ்சம் பிசகினாலும், ஸ்லிப்பாகி கருவியின் கூர்முனைப்பகுதி வயிற்றில் குத்திவிடும் ஆபத்து உண்டு. எனவே நீங்கள் தேங்காயே உரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அந்த கருவியில் கைவைக்காதீர்கள் என்று எங்கள் அய்யாவிட