முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆம். அந்த நாள் நாளை தான்! (Back to the Future)

ஆம். அந்த நாள் நாளை தான்! 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த Back to the Future திரைப்படத்தில் கால இயந்திரத்தில் பயணம் செய்து, அவர்கள் வந்து சேரும் நாள் அக்டோபர் 21, 2015. இதோ, கால வெள்ளத்தில் நாமும் வந்துசேர்ந்துவிட்டோம் அந்த நாளுக்கு! 30 ஆண்டுக்கு முன் வருங்காலம் என்று நீண்டு காணப்பட்ட அந்த நாள் இதோ நிகழ்காலம் என்ற நிலையை எட்ட இருக்கிறது. அப்படி என்ன சிறப்பு 2015 அக்டோபர் 21க்கு? 2012-இல் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டதைப் போல ஏதாவது...? ஒன்றும் கிடையாது. Back to the Future படத்தில் சொல்லப்படும் சாதாரண நாள் தான். ஆனால், இந்த நாளில் உலகம் (அல்லது ஓர் அமெரிக்க நகரம்) எப்படியிருக்கும் என்று கற்பனையில் உருவாக்கியிருந்த நிலை இன்று நடப்பில் இருக்கிறதா? எவ்வெவற்றைக் கடந்து வந்திருக்கிறோம். எவையெல்லாம் எதிர்பார்ப்பைத் தாண்டியிருக்கிறது என்பதையெல்லாம் குறித்துப் பேச, அறிவியல் புனைவுப் படங்களின் மீதான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள சரியான ஒரு நாளாக இது இருக்கும் என்பத் தான் இந்நாளின் சிறப்பு எனவே, நாளை Back to the Future படங்களின் திரையிடலுக்கும், மகிழ்ச்சியான ஒரு கலந்துரையாடலுக்கும் ஏ

தாத்தா ரெட்டமலை சீனிவாசன்: மீசையா, மீசையில்லாமலா?

திவான் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாள் இன்று (ஜூலை 7)! இந்நாள் நினைவுக்கு வந்ததும், உடன் நினைவுக்கு வந்த மற்றொன்று அம்பேத்கர் திரைப்படம். தமிழில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தபோதிலிருந்தே இதை எழுத வேண்டும் என்று   நினைத்துக் கொண்டிருந்தேன்.   திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கருடன் பங்கேற்றவர் ராவ்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் (திரைபடத்தில் அப்படித்தான் குறிக்கப்பட்டிருக்கிறது). ஜாபர் பட்டேலின் ”டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்” படத்தில் வரும் வட்ட மேசை மாநாட்டுக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  முதல் வட்டமேசை மாநாட்டுக் காட்சி (அம்பேத்கரின் வலப்புறம் ராவ்பகதூர் சீனிவாசன்) முறுக்கு மீசையுடன் நாம் பார்த்துப் பழகிய ரெட்டமலை சீனிவாசனை அங்கு காணோம். மாறாக தலையில் முண்டாசுடன் மீசையில்லாத ஒரு பார்ப்பனரைப் போலவே காட்டப்பட்டிருப்பார். ராவ்பகதூர் சீனிவாசன் என்ற பெயரைப் பார்த்ததும், ஜாபர் பட்டேலின் (சீனிவாச அய்யங்கார்கள் மாதிரி) மனதில் அப்படியோர் பிம்

திராவிடத்தை விட்டுவிலகுகிறாரா தளபதி ஸ்டாலின்?

சு ம்மா ஆரியம், திராவிடம் என்று ஓட்ட முடியாது என்பதால் தளபதி தனது பிறந்தநாளை வேறு (கார்ப்பொரேட்) பாணியில் அய்.நா. மன்றம் அறிவித்துள்ள தேதிகளின்படி ஒரு நாளைக் குறிப்பிட்டு கொண்டாடியுள்ளாராம். சொல்லி சந்தோசப்படுகிறது குமுதம் ரிப்போர்ட்டர்! அதாவது திராவிட இயக்கக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்கள் என்பது தான் குமுதம் சொல்ல வருவது! அட, புத்தியற்ற பார்ப்பனியமே! தளபதி ஸ்டாலின் தன் பிறந்தநாளையொட்டி கொண்டாடியது என்ன தெரியுமா? ”பாகுபாடு ஒழிப்பு நாள் - Zero Discrimination Day” . திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவமும், அது தோன்றக் காரணமுமே அது தானே! பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்பதை உறுதியேற்பாகவே நிகழ்த்திக் காட்டியிருப்பது அதன் செயல்பாட்டின் இன்னொரு பரிமாணம் (Dimension) அல்லவா? தன்னுடைய உரையிலும் தளபதி ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது என்ன? ”சாதி, மதம், இனம், மொழி இவைகளைப் பொறுத்தவரையிலே யாருக்கும் பாகுபாடு இருக்கக்கூடாது. நம்முடைய தலைவர் கலைஞரின் தொலை நோக்கு தான் நம்மை போன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக

நெருப்பாற்றை நினைவில் கொள்வோம்!

ஜீன்ஸ் அணிந்தார் என்பதற்காக பீகாரில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, நிர்வாணமாக தார்பங்காவில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் வீட்டின் முன்பு வீசிவிட்டுச் சென்றிருக்கிறது இந்துத்துவா! இந்து மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக இஸ்லாமிய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டு அவரின் ஆணுறுப்பு சிதைக்கப்படுகிறது. கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்படுகிறார். எளிய மக்களிடமிருந்து எவ்வித ஒப்புதலுமின்றி நிலத்தைப் பிடுங்கி, தனியார் கொழுக்க அவர்களுக்குத் தாரை வார்க்க ஓர் அடாவடியான அயோக்கியத்தனமான சட்டம் அவசரவசரமாக செய்யப்படுகிறது. வன்முறையும், கொடூரமும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. மதவாதமும், முதலாளித்துவமும் கைகோர்த்து நாட்டை வேட்டைக்காடாக்குகின்றன. எதிர்காலம் என்று நீட்டக் கூட வாய்ப்பில்லை. எதிர்வரும் நாட்களே கேள்விக்குறிகளாயிருக்கின்றன. வேகமாய் நடக்கும் அத்தனை கொடூரங்களும், கொடுங்கோலர்களின் இறுதிநாளுக்கான முன்னறிவிப்பு என்பது மட்டும் புரிகிறது. ஆனால் அதற்குள் நாம் கடக்கவேண்டியது ஒரு நெருப்பாறு என்பதை நினைவில் கொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது.