முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர். அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான். ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா

ஜெயலலிதா மறைவையொட்டி...

நீங்கள் காத்த சமூகநீதியின் விளைச்சலில் என்றும் வாழ்வீர்கள்! #சமூகநீதி_காத்த_வீராங்கனை! :( சோகமாக உணர்கிறார். 5 டிசம்பர், 05:37 PM மிகப்பெரிய சிக்கலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அம்மையாரின் இழப்பு - துணிச்சலான எதிர்க்குரலின் இழப்பாக இருக்கும்! :( கவலையாக‌ உணர்கிறார். 5 டிசம்பர், 05:41 PM அம்மையார் ஜெயலலிதாவின் இறப்பில் காவி கொண்டிருக்கும் ஆர்வம் தான் பாண்டேயின் அவசர அறிவிப்பு! 5 டிசம்பர், 06:06 PM அம்மையார் ஜெயலலிதாவின் சூழலைப் பயன்படுத்திக் கொண்டும், அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களைப் பயன்படுத்திக் கொண்டும், மிரட்டி, தங்கள் அடியாளை ஆட்சியில் அமர்த்த மத்திய ஆர்.எஸ்.எஸ் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கூடாரத்தில் ஒரு சில ஒட்டகங்கள் நுழைந்திருக்கின்றன. அவற்றை சரியாகக் கையாளுவது அவசியம்... இல்லையேல் கட்சியே கையாடப்படும்! 5 டிசம்பர், 08:27 PM இந்தியா முழுக்க ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசுகின்றன ஊடகங்கள். இதில் செல்லாக்காசு நடவடிக்கைக்கான எதிர்ப்பிலிருந்து சற்று ஓய்வு கொண்டிருக்கிறது மத்திய அரசு! யாகுப் மேமனுக்கு அப்துல் கலாம்... செல்லாக்காசு

சுருட்டப்படுகிறது சேலம் உருட்டாலை!

நட்டத்தில் இயங்குகிறதென்று சேலம் உருட்டாலை தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது மோடி அரசால்! இந்தியப் பணத்தையே ஏகபோகமாக தனியார்க் கும்பலுக்குத் தாரைவார்த்துவிட்டவரிடம் இதை எல்லாம் எதிர்பார்க்காமலா இருக்க முடியும்? படம்- நன்றி: தி இந்து பா.ஜ.க. அரசு தான் அரசுப் பங்குகளை விலக்குவதெற்கென்றே தனி அமைச்சகம் போட்டு வேலை பார்த்த அரசாயிற்றே! எங்க ஊருல மேங்கோப்பு பிரிப்பது என்பதே தனித் தொழில்! பழைய வீடுகளை இடித்து, அதில் தேறக்கூடியதை விற்பது. அப்படித் தான் அரசின் நிறுவனங்களையெல்லாம் கூறுகட்டி விற்கத் தொடங்கினார்கள். மேங்கோப்பு பிரிக்கப்படும் வீடுகள் என்பவை, இனி பயன்படுத்த முடியாத நிலையிலிருப்பவை. வீட்டு உரிமையாளருக்கு அதன் இறுதி நிலையும் பயன்படும். ஆனால், இவர்கள் பேய் புகுந்த வீடு என்று பிராடு கிளப்பி, மொத்தமாக சல்லிசாக ஆட்டையைப் போடும் அயோக்கியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, நாட்டை நெட்டுக் குத்தலாக்கப்போகும் இந்த பொருளாதாரப் புலிகளும், தனியாருக்கு எல்லாவற்றையும் விற்பதற்கு போட்டிபோடும் இந்த அரசுகளும், அடிப்படையான நம் கேள்விக்கு ப

கர்நாடகக் கலவரம்: மத்திய உளவுத் துறையின் கைங்கர்யம்

மிக நுணுக்கமாக, ஆழமாக மத்திய அரசின் உளவுத்துறை கர்நாடகத்தில் செயல்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சித்தராமய்யாவின் ஆட்சியை குலைக்கவும், அடுத்து வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டுமல்ல... நீண்ட கால நோக்கில், தமிழக கர்நாடக மக்களின் பகை நெருப்பை ஊதி தக்க வைக்கவும், பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் பகைமையை கூர்மைப்படுத்துவதன் மூலம் இந்திய தேசியத்திற்கெதிரான குரலை ஒடுக்கவும், மத்திய அரசின் இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு எதிராக களமிறங்கும் தமிழகத்திற்கு நெருக்கடி கொடுக்கவும் இத்தகைய பணிகளில் மத்திய உளவுத்துறை ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும்;  பொய் மோடி கும்பலின் முகத்திரை கிழித்துப் போட வேண்டும்.

டாபர் ஹனியும் கலைவாணரும்

டாபர் ஹனி புதிய விளம்பரம் ஒன்று. தேன் புட்டியைக் கையில் வைத்துக் கொண்டு எதிரிலிருக்கும் பெண்ணைப் பார்த்து வம்பிழுக்க, 'ஹனி' என்கிறார். அவர் முறைத்துவிட்டு, அதுவா ஹனி, இது ஹனி என்று டாபர் ஹனியைக் கையில் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது அவ்விளம்பரம். இந்தக் காட்சியைக் கேட்டதும் உங்களுக்கு இன்னொரு காட்சியும் பாடலும் நினைவுக்கு வருமே! கண்டதும் எனக்கு வந்தது. ஏனெனில் சிறுவயதில் காலை எழுந்ததும் கேட்பது, அல்லது எங்களை எழ வைப்பதே என்.எஸ்.கே பாடல்கள் அல்லது எம்.ஜி.ஆர். இன உணர்வுப் பாடல்கள் போன்ற இசைப் பேழைகள் தான். (நன்றி: சாமி சமதர்மம்) அதில், டி.ஏ.மதுரத்தைப் பார்த்து, கலைவாணர் என்.எஸ்.கே., பாடுவதாக அம்பிகாபதி படத்தில் அமைந்தது அந்தப் பாடல். 'கண்ணே... உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா?' என்று தொடங்கி, தங்கமே, தேனே என்று ஒவ்வொரு சொல்லாக மதுரத்தை விளித்துப் பாடுவார். ஆசையுடன் கூடிய பொய்க் கோபத்தோடு மதுரம் அம்மாவின் முறைப்பும், ஒவ்வொன்றுக்கும் கலைவாணர் சொல்லும் விளக்கமும், அவரின் குரலிலேயே வெளிப்படும் பாவமும் அட்டகாசம். (பாடல் 2:18-ல் தொடங்கும்) ஏனோ இன்றைக்கு இர

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான் சரவணன்! இது செய்யத் துணிந்தவர்கள்... எதுவும் செய்யத் துணிவார்கள்! உயர்கல்விக்கு நுழையும் போதே மருத்துவரின் உயிரை உறிஞ்சுகின்றன ஊசிகள்! எச்சரிக்கிறான் சரவணன்! இந்தியாவெங்கும் சென்று பிணமாகத் தயாரானால் எழுதுங்கள் நீட் தேர்வு! முனைவராகும் முன்னே முறிக்கப்படும் ஆய்வு இறக்கைகள்! கேட்காமலே இட ஒதுக்கீடு வேமுலாவுக்கு அடுத்து இடுகாட்டில்! 'என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என்ற கடைசி வரிகளோடு 'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு பெயர் சேர்க்க வசதியாய் அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன கடித நகல்கள்! இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து விடுபட சென்ட்ரல் யுனிவர்சிட்டி கேம்பஸ் ஸ்டோர்களில் குறைந்த விலையில் தூக்குக் கயிறுகள்! உயர்குடிக்கே உயர்கல்வி ! பிறர் நுழைந்தால் 'உயிர்' குடிக்கும் என்பதறிக! பனியன் தைக்க ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு உயர் மருத்துவனாகி ஊசியெடுக்க ஆசையா? தூண்டியது நடக்காவிட்டால் தூண்டியவர்களே ஆயுதம் தூக்குவார்கள்! நூலிய சிந்தனை தூக்கத் தொடங்கியிருக்கிறது ஊசிகளை! நூலியம் பதறுகிறது... கடிதத்தில்

கொடித் திருடர்களை வேரறுப்போம்! தமிழீழ இலச்சினைகளை மீட்டெடுப்போம்!

தமிழீழம் என்னும் கனவைச் சுமந்தும், புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் நேசித்தும் வருவோர்க்கு தமிழீழக் கொடி தரும் உணர்வு எத்தகையது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஈழத் தமிழர்க்கென்றொரு நாடு அமைவதை, நாடு கடந்தும் தன் நாடாகப் பார்க்கும் மனம் அது. துப்பாக்கித் தோட்டாக்கள் தெறிக்க, முன்னங்கால் பறக்க கூண்டை விட்டுப் பாயும் புலியின் உருவம் தரும் சிலிர்ப்பும், எழுப்பும் உணர்வலையும் நம் உயிர் அடங்கும் வரை ஓயாதது. அத்தகைய உயர் சின்னத்தை, உயிர்க் கொடியை, உலுத்தர் கூட்டம் பயன்படுத்துவதையும், அதனால் அது கீழ்மையுறுவதையும் காணச் சகிக்கவில்லை. சிந்தை பொறுக்கவில்லை. புலிகள் தங்களை மௌனித்துக் கொண்டபிறகு முளைத்த காளான்களெல்லாம் புதிது புதிதாய் கதையளந்துகொண்டும், புலி வேஷம் கட்டிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பதும் காலத்தின் கொடுமை. எத்தனையோ ஈகியர்கள் தங்கள் உயிர் தந்து காத்த சின்னங்கள் இவை. ஆனால், இன்று பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும் பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச் சலியாத வருவாயும் உடைய தாகத் தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம் எலியாக முயலாக இருக்கின் றார்கள்! ஏமாந்த காலத்தில் ஏற்றங்

இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள்?

"இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள்?"~ என்று கேட்கும் அயோக்கியர்களுக்கும், மடையர்களுக்கும் இது சுத்தமாகத் தெரியாது. நீங்களாவது தெரிந்துகொள்ளுங்கள். இ ந்திய சுதந்திரத்திற்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல்முறையாக (1993) இடஒதுக்கீடு கிடைத்தது. அதற்கு வி.பி.சிங் என்னும் பெருமகன் தன் பிரதமர் பதவியை பலி கொடுக்க வேண்டியிருந்தது. அதுவும் வேலைவாய்ப்பில் மட்டும் தான்! அதற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தான், அதாவது 2006-இல் தான் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. அதையும் பிச்சுப் பிச்சுத் தான் போடுவோம் என்று சொல்லியும் இன்னும் முழுமையாகக் கிடைத்தபாடில்லை. * கல்வியில் இட ஒதுக்கீடு இல்லாமல், வேலையில் முதலில் இட ஒதுக்கீடு தருதல் என்பதே கேள்விக்குரியது. முதல் படிக்கே வழி விடாமல், மூன்றாவது படியில் ஏறு என்பதைப் போல. அதையும் கடந்து தான் சிலர் ஏறினார்கள். ஆனால் அங்கேயும் உயர்ஜாதிக் கும்பல் இடத்தை விட்டுவைக்கவில்லை. * முதல்முறையாக இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும்போதே, காலங்காலமாக பசியில் கிடந்து பந்தியில் அ