முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள்?

"இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள்?"~ என்று கேட்கும் அயோக்கியர்களுக்கும், மடையர்களுக்கும் இது சுத்தமாகத் தெரியாது. நீங்களாவது தெரிந்துகொள்ளுங்கள். இ ந்திய சுதந்திரத்திற்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல்முறையாக (1993) இடஒதுக்கீடு கிடைத்தது. அதற்கு வி.பி.சிங் என்னும் பெருமகன் தன் பிரதமர் பதவியை பலி கொடுக்க வேண்டியிருந்தது. அதுவும் வேலைவாய்ப்பில் மட்டும் தான்! அதற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தான், அதாவது 2006-இல் தான் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. அதையும் பிச்சுப் பிச்சுத் தான் போடுவோம் என்று சொல்லியும் இன்னும் முழுமையாகக் கிடைத்தபாடில்லை. * கல்வியில் இட ஒதுக்கீடு இல்லாமல், வேலையில் முதலில் இட ஒதுக்கீடு தருதல் என்பதே கேள்விக்குரியது. முதல் படிக்கே வழி விடாமல், மூன்றாவது படியில் ஏறு என்பதைப் போல. அதையும் கடந்து தான் சிலர் ஏறினார்கள். ஆனால் அங்கேயும் உயர்ஜாதிக் கும்பல் இடத்தை விட்டுவைக்கவில்லை. * முதல்முறையாக இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும்போதே, காலங்காலமாக பசியில் கிடந்து பந்தியில் அ