முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொடித் திருடர்களை வேரறுப்போம்! தமிழீழ இலச்சினைகளை மீட்டெடுப்போம்!

தமிழீழம் என்னும் கனவைச் சுமந்தும், புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் நேசித்தும் வருவோர்க்கு தமிழீழக் கொடி தரும் உணர்வு எத்தகையது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஈழத் தமிழர்க்கென்றொரு நாடு அமைவதை, நாடு கடந்தும் தன் நாடாகப் பார்க்கும் மனம் அது. துப்பாக்கித் தோட்டாக்கள் தெறிக்க, முன்னங்கால் பறக்க கூண்டை விட்டுப் பாயும் புலியின் உருவம் தரும் சிலிர்ப்பும், எழுப்பும் உணர்வலையும் நம் உயிர் அடங்கும் வரை ஓயாதது.

அத்தகைய உயர் சின்னத்தை, உயிர்க் கொடியை, உலுத்தர் கூட்டம் பயன்படுத்துவதையும், அதனால் அது கீழ்மையுறுவதையும் காணச் சகிக்கவில்லை. சிந்தை பொறுக்கவில்லை. புலிகள் தங்களை மௌனித்துக் கொண்டபிறகு முளைத்த காளான்களெல்லாம் புதிது புதிதாய் கதையளந்துகொண்டும், புலி வேஷம் கட்டிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பதும் காலத்தின் கொடுமை.

எத்தனையோ ஈகியர்கள் தங்கள் உயிர் தந்து காத்த சின்னங்கள் இவை. ஆனால், இன்று
பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்
பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்
சலியாத வருவாயும் உடைய தாகத்
தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்
எலியாக முயலாக இருக்கின் றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோ ன்
புலிவேஷம் போடுகின்றான்!
என்று பொங்கிய புரட்சிக் கவிஞரின் வரிகளுக்கு முழு முதல் சான்றாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இந்த கொடித் திருடர்கள்.

இந்தக் கொடி கேடர்களின் திருட்டுச் செயலால், இவர்களின் செயல் பொறுக்காமல், ஜாதி வெறி பிடிக்காமல் இந்தக் கும்பலிலிருந்து வெளியேறும் நபர்கள் நாம் தமிழரை எதிர்க்கிறேன் என்று இவர்களால் திருடி வெளியிடப்பட்ட உயரிய புலிக் கொடியினைக் காலால் மிதித்து ஒளிப்படங்களை வெளியிடும் கொடுமை நடக்கிறது.

இந்தக் கொடிக்குரிய மரியாதை எத்தகையது தெரியுமா? தமிழீழத் தேசியக் கொடியை எப்படி பயன்படுத்துவது என்பதற்கே ஒரு பயன்பாட்டுக் கோவையை உருவாக்கி, அதன்படி மதிப்பளித்து வந்தனர் புலிகள். அத்தகைய கொடியைத் தான் கீழ்மைப்படுத்தி வருகின்றனர் இந்தச் சிறுமதியாளர்கள்.

கொடியில் எந்த எழுத்தும் இருக்கக் கூடாது என்பது பயன்பாட்டுக் கோவை சொல்லும் கட்டளை. ஆனால் அதையும் இவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

நாம் தமிழர் என்று ஆதித்தனாரின் கட்சிப் பெயரைத் திருடி இவர்கள் அமைப்புத் தொடங்கியது, புலிகளும், தலைவர் பிரபாகரனும் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கக் கூடும் என்று கருதப்பட்ட காலத்தில்!


அப்போது இவர்கள் பயன்படுத்திய கொடி சூரியன் போல் தோன்றும் கம்பி வளையத்திலிருந்து இடுப்பு வளைந்து வெளியேறும் புலி சின்னம் பொறித்ததாகும். ஆனால், புலிகளும், தலைவரும் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று இவர்களுக்கு உறுதியானபின், நேரடியாக புலிகளின் கொடியும், தமிழீழக் கொடியுமாய் பயன்படுத்தப்பட்ட புலியின் ஓவியத்தையே பயன்படுத்தி, சிவப்புப் பின்புலத்தில் கால்களை மட்டும் நீக்கிவிட்டு கம்பி விட்டுப் புலி பாய்ந்து வரும் கொடியையே நாம் தமிழர் கொடி என்று திரித்துப் பயன்படுத்துகின்றனர்.

அது மட்டுமல்லாமல், புலிகள் ஒலிப்பேழையாகக் கூட வெளியிடாத "மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி" என்ற மாவீரர் பாடலைத் திருடி வெட்டிச் சிதைத்து தங்களின் உறுதிமொழியென்று உலாத்துகின்றனர்.

விடுதலைப் புலிகளின் பெயரையோ, படத்தையோ, சின்னங்களையோ தனிப்பட்ட நலனுக்காகவும், விளம்பரத்திற்காகவும், வணிகத்திற்காகவும் பயன்படுத்தினால் அதைக் கடுமையாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.

ஆயுதங்களை மௌனித்ததாக அவர்கள் அறிவித்த பின்னர், அந்தச் சின்னங்களையும், கொடியையும் பயன்படுத்துவதோடு, அவை அவமதிப்புக்குள்ளாவதற்கும் காரணமாக அமைந்து அந்த உயரிய கனவைக் கேவலப்படுத்தி வருகின்றனர். இவர்களால் கிஞ்சிற்றும் ஈழத் தமிழர்களுக்கோ, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கோ, மொழிக்கோ, இனத்துக்கோ, அவர்களே தமக்கோ பயனேற்படப் போவதில்லை.


தேர்தல் நேரம் நாடு முழுக்கப் போட்டியிடுகிறோம் என்று கணக்குக் காட்டி, உலகெங்கும் வாழும் தமிழ்ப்பிள்ளைகள் உயிரைத் தந்து சம்பாதிக்கும் பொருளையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தரும் பொருளையும் வாரிச் சுருட்டும் இந்தத் திருட்டுக் கும்பலைப் புரிந்து, உலகத் தமிழர்களிடம் இவர்களைத் தோலுரிக்க வேண்டும்.

ஈழத்தைக் காட்சிப் பொருளாக்கி, தமிழர் உரிமையையும், உணர்வையும் விற்பனைப் பொருளாக்கி கல்லா கட்டும் நாம் தமிழர் கும்பலிடமிருந்து தமிழீழ கொடி, இலச்சினை, பாடல் போன்றவற்றை மீட்க வேண்டியது அவசியமாகிறது. எத்தனை மாற்றுக் கருத்து இருந்தாலும், தமிழின உணர்வாளர்களுக்கு இந்த கும்பலின் துரோகம் ஏற்பாயிருக்க முடியாது.

அதுவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகி 40 ஆண்டுகள் நீறைவுற்றிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில், தமிழின உணர்வைச் சிதைத்தும், ஜாதி-மதம் கடந்த தமிழர் தம் ஓர்மையைக் கேள்விக்குள்ளாக்கியும், வீரர்களின் ஈகத்தினைக் காசாக்கியும், இந்துத்துவத்தின் ஒட்டுண்ணிகளாக அலைந்தும், தமிழர்களிலேயே பெரும்பகுதியினர்க்கு துரோக முத்திரை குத்தும் 'பிறரை நம்பாத தான் திருடிகளான நாம் தமிழர் கும்பலை வேரறுப்போம். உண்மைத் தமிழ் விடுதலைப் பெரு நெருப்பை நெஞ்சில் சுமப்போம் என்று உறுதியேற்போம்.

குறிப்பு: ஈழம் என்றால் 2009-க்குப் பிறகு என்று புரிந்துகொண்டு, இந்தக் கொடித் திருடர்களின் பேச்சில் மயங்கி வரலாறு புரியாமல் பேசுவோருக்கு ஒரு செய்தி. சிறு வயது முதல் இந்தச் சின்னங்களை நெஞ்சில் தாங்கி, வீடுகளில் பதித்து, வாகனங்களில் சுமந்து சென்று, எதிர்ப்புக்கு அஞ்சாமல் தடா காலத்திலும் ஊரெல்லாம் பரப்பிய பெரியார் தொண்டர்களுக்குத் தெரியும் - இந்த டம்ளர் திருடர்களிடம் போய் இக்கொடி அவதிப்படுவதைக் காணும் வலி.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உனக்கு லூசாடா கடைசி வரைக்கும் தமிழன ஒற்றுமையா இருக்க விட மாட்டீர்களா நம் புலி கொடியை அவர்கள் திருடவில்லை அவர்களும் தமிழீழ விடுதலை புலிகள் தான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam