முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர். அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான். ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா

ஜெயலலிதா மறைவையொட்டி...

நீங்கள் காத்த சமூகநீதியின் விளைச்சலில் என்றும் வாழ்வீர்கள்! #சமூகநீதி_காத்த_வீராங்கனை! :( சோகமாக உணர்கிறார். 5 டிசம்பர், 05:37 PM மிகப்பெரிய சிக்கலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அம்மையாரின் இழப்பு - துணிச்சலான எதிர்க்குரலின் இழப்பாக இருக்கும்! :( கவலையாக‌ உணர்கிறார். 5 டிசம்பர், 05:41 PM அம்மையார் ஜெயலலிதாவின் இறப்பில் காவி கொண்டிருக்கும் ஆர்வம் தான் பாண்டேயின் அவசர அறிவிப்பு! 5 டிசம்பர், 06:06 PM அம்மையார் ஜெயலலிதாவின் சூழலைப் பயன்படுத்திக் கொண்டும், அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களைப் பயன்படுத்திக் கொண்டும், மிரட்டி, தங்கள் அடியாளை ஆட்சியில் அமர்த்த மத்திய ஆர்.எஸ்.எஸ் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கூடாரத்தில் ஒரு சில ஒட்டகங்கள் நுழைந்திருக்கின்றன. அவற்றை சரியாகக் கையாளுவது அவசியம்... இல்லையேல் கட்சியே கையாடப்படும்! 5 டிசம்பர், 08:27 PM இந்தியா முழுக்க ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசுகின்றன ஊடகங்கள். இதில் செல்லாக்காசு நடவடிக்கைக்கான எதிர்ப்பிலிருந்து சற்று ஓய்வு கொண்டிருக்கிறது மத்திய அரசு! யாகுப் மேமனுக்கு அப்துல் கலாம்... செல்லாக்காசு