முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைஞரைச் சந்தித்த மோடி - உண்மைக்கு நெருக்கமான சில ஊகங்கள்

'டில்லிக்கு வர்றீங்களா?'ன்னு கலைஞர்கிட்ட மோடி கேட்டாராமே! அதுக்கு கலைஞர் பேசியிருந்தால் என்ன பதில் சொல்லிருப்பாருன்னு நினைக்கிற? நீ நர்சுகளை அனுப்பி ஒரு ஆளைக் காலி பண்ண மாதிரி, எங்கிட்டயும் போட்டுப் பார்க்கிறியா? போய்ட்டு வா தம்பி!ன்னு டாட்டா காட்டியிருப்பாரு. மோடியை வாசல் வரை வந்து வழியனுப்பினாராமே கலைஞர், அப்படியா? அப்படியெல்லாம் இல்லை. ஆனால், அவர் கீழ வந்து தொண்டர்களைப் பார்த்ததற்கு 3 காரணங்கள் இருக்கலாம். 1. அவர் கீழ வரலைன்னா, மோடி வந்து போனதுதான் செய்தி ஆகியிருக்கும். 2.மோடி கூட கூட்டி வந்த கும்பல் 'பராத் மாதா கீ செயின்' வித்து, கோபாலபுரத்தில் பொல்யூசன் ஏற்பட்டுடுச்சாம். அதைக் கிளியர் பண்ண 'கலைஞர் வாழ்க' முழக்கம் வந்தாதான் சரியா இருக்கும். அதான். 3. வெளிய வந்த ஆள் போயாச்சா, இல்லை எதாவது விசமம் பண்றாரான்னு செக் பண்ண வந்திருப்பார். பின்குறிப்பு: தலைப்பைப் பார்த்து வேற மேட்டர்னு நினைச்சிங்களா? இதைவிட முக்கியமான விசயம் அங்க ஒன்னுமில்லை.

புதிதாக 'புத்தகம் வெளியிட விரும்புவோர்' கவனத்துக்குச் சில...

புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் பலர் எழுத்தாற்றல் மிகுதியினாலும், எழுத்தார்வம் மிகுதியினாலும், புகழ் ஆசை மிகுதியினாலும் கூட புத்தகம் போடுவதைப் பார்க்கிறோம். ஏராளமான கவிதைப் புத்தகங்கள், தன் வரலாற்றுப் புத்தகங்கள், தங்களுக்குத் தோன்றிய, இதுவரை எவரும் சொல்லாத (என்று தாங்களே கருதிக் கொள்ளும்) 'அரிய' கருத்துகளை எழுதியே தீருவேன் என்று அடம்பிடிப்போர் எழுதும் புத்தகங்கள் போன்றவற்றையும் கண்டு வருகிறோம். இவற்றுக்கு மத்தியில் நல்ல கருத்துகளடங்கிய புத்தகங்களும் அரிதாக வரக் காண்கிறோம். நண்பர்கள், தெரிந்தோர் என்பதற்காக வாங்கிவிடுவோம் - படிப்போமா என்பது தெரியாது. எப்படியாயினும் எந்தக் கருத்தையும் வெளியிடுவதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. காலப் போக்கில் அப்படி எழுதுவோரில் பலர் நன்கு தேறி வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, முதல் சில முயற்சிகளை, அவர்களுக்கான பயிற்சியாக நாம் கருதலாம், தவறில்லை. கடந்த பல்லாண்டுகளாகவே என் பள்ளித் தோழர்கள் தொடங்கி, இணையத் தோழர்கள், தந்தையின் நண்பர்கள் வரை தங்கள் எழுத்துகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற ஆர்வமுடையோர் பலரும், தொடர்ந்து வாசிக்க விரும்புபவ

உனைத் துளைத்த குண்டுகள்...

உலகப் போராளியாக   சே உருவான நாளின்   பொன் விழா இன்று! ஒடுக்கப்பட்டோருக்கான குரலில் அடக்குமுறைக்கு எதிரான உணர்வில் விடுதலைக்கான பெரு விருப்பத்தில் என்றும் நீ வாழ்கிறாய் சே! அமெரிக்கா   தனக்குத் தானே   வைத்துக் கொண்ட தற்கொலைக் குண்டு   நீ! உனைத் துளைத்த குண்டுகள்   பலவாய்ப் பெருகி ஆதிக்கத்தின்   அடிப்பீடத்தைத்   தகர்க்கும்! உன் போராட்ட   இருப்பை அன்றைய தகர்ப்பு நிகர்க்கும்!

ஒரே தேர்தல்?

ஒரே நாடு... ஒரே மொழி... ஒரே தேர்வு... ஒரே கல்வி முறை... இப்போ ஒரே தேர்தல்? அதிக செலவு, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, அடுத்தடுத்து தேர்தல் போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த முன்புபேச்சு எழுந்தது. நிதி ஆயோக் அதன் அடுத்த கட்டத்திற்கு நடந்திருக்கிறது. 2019-க்குப் பதில் 2018-லேயே தேர்தல் நடத்தலாமா என்று யோசிக்கிறதாம் மோடி அரசு. என்ன செய்ய? மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக தேர்தலையே தியாகம் செய்துவிடலாம் என்று கூட நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கும்... 2018-இல் தேர்தல் நடந்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். வந்தால் நிலைமை அது தான். ”ஆமாங்க... எதுக்கு இவ்வளவு தேர்தல்? எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு? எவனோ ஒருத்தன் இருந்துட்டுப் போறான்” என்பதாக தாங்களின் மக்களின் பிரதிநிதிகள் என்று கருதிக் கொண்டு மாமாக்கள், மாமிகள், அவர்களின் பாதந்தாங்கிகள் உள்ளிட்ட ”மட சாம்பிராணிகள்” கருத்து பரப்ப ஆரம்பிப்பார்கள். ஆயிரம் கெட்ட வார்த்தைகள் மனதில் தோன்றினாலும், அவற்றை அடக்கிக் க

பன்றியும் பூணூலும்

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் நான் கண்ட சுவரெழுத்து ஒன்றின் படம் மூலம் அறிந்தேன். இது தொடர்பாக அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களிலிருக்கும் பூணூலூடுருவிகள் கொந்தளித்து திராவிடர் கழகத்துக்கு எதிராக ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்களாம். இந்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது த.பெ.தி.க! போராட்டத்துக்கான கிரெடிட் அவர்களுக்குப் போவது தான் சரியானது. திராவிடர் கழகம் அப்படியொரு போராட்டத்தை அறிவித்தால், அதற்கான எதிர்வினையையும் திராவிடர் கழகம் தாராளமாக எதிர்கொள்ளும் என்பது வரலாறு. ஆனால், என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்றே தெரிந்துகொள்ளாமல் கூறுகெட்டத் தனமாக குதிப்பது பின்புத்திப் பார்ப்பனர்களுக்குப் பழக்கமானது. என்ன செய்ய? நிற்க, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்ததாக புராணம் வைத்து, தீபாவளி கொண்டாடும் பார்ப்பனர்கள், அந்த வராக அவதாரத்தின் அடையாளமான பன்றிக்கு பூணூல் மாட்டினால் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை பூணூல் அணிவிப்பதற்கான / உபநயனம் செய்வதற்கான (பூணூல் கல்யாணம் செ

நீட் ஒழிப்பு: காமராஜர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதி!

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும், அதையொட்டிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான மாணவர் பட்டியலும் இதுவரை இல்லாத வகையில் பெரும் சமூக அநீதி நிகழ்ந்துகொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கல்விக்கான நமது நூறாண்டுப் போராட்ட வெற்றியின் அடித்தளத்தை அசைக்க நடக்கும்முயற்சி இது! மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று வைத்திருந்த சதியை மாற்றி, அனைவருக்குமான கல்வியாக அதை உருவாக்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது! பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்ட பள்ளிகளையும் திறந்து, ஒரு பங்கு கூடுதலாக பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பாய்ச்சிய கல்வி வள்ளல் காமராசரின் செயலுக்கான பார்ப்பனியத்தின் எதிர்வினை இது! கம்யூனல் ஜி.ஓ ஆணை தொடங்கி, அதை நிறுவுதற்கான போராட்டம், 43 தொடங்கி 69% வரை சட்டபூர்வமாக நிறுவிய வெற்றி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மண்டல் கமிஷன் மூலம் பெற்று மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 49.5 என்று உயர்த்திய முயற்சி, அதை உயர்கல்வித்துறைக்கும் மெல்லமெல்லக் கொண்டு வந்த ஆட்சி என்று கடந்த 95 ஆண்டு கால சட்டப் போராட்ட

’கருப்புச் சட்டை’ காத்திருக்கு பெரியார் திடலில்!

அப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீ திடலுக்கு வரத் தொடங்கினாய்! நெஞ்சினிக்கும் நெய்மணக்கும் நெய்வேலி திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத்துக்குப் பிறகு, நாற்பதுக்கு நாற்பதென்று வெற்றிக்கனி பறித்து, சென்னையிலிருந்தபடி டெல்லியின் ஆட்சிக் கட்டிலுக்கு நான்கு கால்களையும் உறுதிசெய்திருந்தாய்! 2004 ஜூன் - கடல்கடந்தும் தமிழனாய் இணைத்த சிங்கப்பூர் சாரங்கபாணி நூற்றாண்டு விழாவுக்காக மீண்டும் கால் பதித்தாய் பெரியார் திடலில்! ’காலவெள்ளத்தில் வெவ்வேறு பயணங்களிலிருந்த எங்களை இணைத்தார் சிங்கப்பூர் சாரங்கபாணி - என்னை அழைத்ததும் ஒரு சாரங்கபாணி (ஆருயிர் இளவல் வீரமணி) தான்’ என்று சிலேடையால் மகிழ்ந்தாய்! ’அண்ணன் - தம்பி உறவென்றாலும் சண்டை வரலாம்; தாய் - தந்தை உறவென்றாலும் சந்தேகம் வரலாம்; திராவிடர் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இருப்பது தாய் - மகன் உறவு’ என்று நெஞ்சுருகச் சொன்னாய்! இறையனார் மறைந்தார் - ஆசிரியர் அமெரிக்காவில்! தம்பிக்கும் சேர்த்து ஆறுதலாய் வந்து நின்றாய் திடலின் ஒரு குறுகிய அறையில்! பொருளாளர் சாமிதுரை மறைந்தார் - அவர்தம் அன்பு நண்பர் திருச்சி ம

ராஜீவ் கொலையும், முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஆரிய சூழ்ச்சியே!

ஆதரவாக இருந்தவர்களையும் கொட்டிக் கொட்டி எதிர் நிலையில் வைத்திருக்கும் கைக்கூலி தமிழ்த் தேசியங்கள் வாழ்க! என்ன செய்ய வசவாளர்களையும் வாழ்த்தச் சொன்ன அண்ணா எங்கள் முன்னால்! ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் அனைவர் மீதும்! ஒருபோதும் புலிகளை எதிர்நிலையில் நிறுத்தி விமர்சிக்க முடியாது. திராவிடப் பேரினத்தின் உரிமைக் குரலின் இன்னொரு வடிவம் அவர்கள் ஏந்திய ஆயுதங்கள்! அரசியலுக்கு பதிலாயுதம் அரசியல் - இந்தியாவில்! ஆயுதத்திற்கு பதிலரசியல் ஆயுதம் - ஈழத்தில்! மாவோவின் கூற்றை மறுபடியும் வாசித்துப் பாருங்கள்! இங்கு திமுக-வையும், திராவிட இயக்கங்களையும், தலைவர் கலைஞரையும், தமிழர் உரிமையையும் வீழ்த்தத் துடிக்கும் அதே ஆரியம் தான், அங்கே தமிழீழ விடுதலைப் புலிகளையும், மேதகு பிரபாகரனையும், தமிழர் உரிமைப்போராட்டத்தையும் வீழ்த்தத் துடித்தது- துடிக்கிறது. இங்கு இந்தியா என்னும் பெயரில் நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளையும், நாடு கடந்தும் ஆரியம் நிகழ்த்தியிருக்கிறது. புலிகளின் நிலைப்பாட்டில், செயல்பாட்டில், உடனிருப்பதாக அவர்கள் நம்பிய நயவஞ்சகர்களின் சொல்லால் விளைந்த பேரழிவில் மாற்றுக் கருத்துகள்

டிஜிட்டலில் கரையும் டேட்டா?

ஹார்டு டிஸ்குகளில் கண்ணுக்குத் தெரியாத காரணங்களால் காணாமல் போகும் கோப்புகளைப் பற்றி அறிந்ததும், ஏற்படுகிற மனநிலை - அணுகுண்டு வீச்சில் அழிந்துபோன நகரங்களில் உறவுகளைத் தேடுகிற மனநிலை! சுவடே இல்லாமல் அழிந்துபோய்விடும் அவற்றைப் பதிவு செய்யவோ, காக்கவோ நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நொடியில் சிலிக்கான் பொதிகளுக்குள் கரைந்துபோய்விடுகின்றன. ஹெட் கடித்தாலும் மிச்சமிருக்கும் ஒலி/ஒளிப்பேழையின் (கேசட்) மேக்னடிக் டேப்பை செலோ டேப் கொண்டு ஒட்டி பத்திரப்படுத்தும் அளவிற்குக் கூட  பாதுகாப்பில்லை. சிடிகள் நொறுங்கினால் 700 எம்பி, டிவிடி தெறித்தால் 4.7 ஜிபி, ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனாலோ ஒன்றிரண்டு டிபி என நம் வரலாற்றை, படைப்பை காணாதடித்து நம் பிபியை வெகுவாக எகிற வைத்துவிடுகின்றன. கடந்த தலைமுறை பிலிமாகவும், புத்தகமாகவும், படங்களாகவும் காத்து வைத்தவைகளை முழுமையான செலவுவைக்கும் தீர்வுகளுக்குப் போகமுடியாத நம் எளிய (சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்குகள் போன்ற) டிஜிட்டல் முயற்சிகள் ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுகின்றன. கிழிந்த தாள்களை ஒட்டியோ, சிதைந்த படத்தின் மீது வரைந்தோ அவற்றை மீட்டமைக்க முட

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam

இந்து மதமும் இந்துத்துவ அரசியலும் ஒன்றா?

"இந்து மதத்த பின்பற்றுவதும்.. இந்துத்வ அரசியல பின்பற்றுவதும் ஒன்னா...?????!!! அப்புடினு ஒரு கேள்விய எழுப்புராங்களே.... ப்ளீஸ் கொஞ்சம் விளக்குங்க.." என்று நண்பர் ஒருவருக்காக தோழர் ரத்ன. செந்தில் குமார் கேட்டிருந்தார். அந்த பதிவில் என் உடனடி இடுகைகள் (குறிப்புகள்) இவை. //1. இந்து மதத்தைப் பின்பற்றுவோரை எளிதாக இந்துத்துவத்திற்குள் கொண்டுவந்துவிடலாம் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் கருத்து. மெதுவாக அப்படித்தான் இதுவரை அவர்களது வெற்றியும் வந்திருக்கிறது. ஆனால், தாங்கள் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருக்கிற மக்களிடம் இரண்டும் வேறு வேறானவை என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதனால், இந்துமதம் என்பது சரியானது என்பது நம் கருத்தல்ல என்பதையும் விளங்க வைக்க வேண்டும். 2. பொதுவாக தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்பவர்களிடம், இந்துமதத்தின் கூறுகளைப் பார்க்க முடியாது. அவர்களிடம் இருப்பது பழக்க வழியின் அடிப்படையிலான வழிபாட்டு முறை. இந்துமதத்தின் வழிகாட்டு நூல்கள் அல்லது அதன் விதிமுறைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றுவதில்லை. தங்கள் குல வழக்கங்களையே இவர்கள் பின்ப

பிறகு பேசிக் கொள்ளலாம் #திக - திமுக கருத்து வேறுபாடு

சொல்வதற்கு ஏராளம் பதில்கள் இருக்கின்றன; கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் இருக்கின்றன. தீர்க்கப்படவேண்டிய சந்தேகங்கள் இருக்கின்றன... இரு தரப்பிலும்! அவையெல்லாம் சாவகாசமாக சந்தோசமாக இருக்கும்போது பேசிக் கொள்ள வேண்டியவை. அப்போது அவை விட்டுக் கொடுத்தல்களாகவும், புரிதல்களாகவும் மாறிப் போகும். ஒரு பிரச்சினையின் மீதான வெவ்வேறு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதையே கிளறிக் கொண்டிருந்தால், வார்த்தை வளர்ப்பு காரணமாக புரிதல்கள் கூட மாறிப் போகும் அபாயம் இருக்கிறது. தமிழகத்தில் ஏராளமான அவசரமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. அதைவிட்டுவிட்டு, ஒன்றுமில்லாத பிரச்சினையை சொறிந்துகொண்டு நமக்குள் நாமே முரண்பட்டுக் கொண்டிருத்தல் நலமன்று. திமுக தோழர்களுக்கு புரிதலுக்காக மீண்டும் ஒன்றைச் சொல்லுகிறேன். அதிமுக அணிகளுக்குள் எந்த அணி இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வை வேறு. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பதென்பது வேறு. இதில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு தவிர, பிற பிரச்சினைகளில் ஒரே திசையில் தான் நாம் பயணிக்கிறோம். அது தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம். வாரிசு அரசியல், 2ஜி

யாரிடமும் நல்ல பெயரெடுக்க அவசியமில்லை

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் நேற்று நடந்து கொண்ட விதம் பற்றி நமக்கு மாற்றுக் கருத்தும், விமர்சனமும் உண்டு. அதை சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டிய கடமை கொண்ட திராவிடர் கழகத் தலைவர் நேற்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இது யாருக்கு உவப்பானது, யாருக்கு வெறுப்பானது என்பதையெல்லாம் யோசித்து கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் திராவிடர் கழகத்துக்கு ஒரு போதும் இல்லை. அதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்புவோர், மாற்றுக் கருத்து கொண்டோர் தாராளமாக தெரிவிப்பதை யாரும் எதிர்க்க முடியாது. தரம்தாழ்ந்த விமர்சனங்களும் வரும் என்பது நமக்குப் புதிதல்ல. அரசியல் தளத்தில் இயங்கும் இயங்கங்களுள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பெரிதும் செயல்படுத்தக் கூடிய இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்பதன் காரணமாகத் தான், அது வலுவோடிருக்க வேண்டும் என்றும், ஆட்சியில் அமர்ந்து திராவிட இயக்கக் கொள்கைகளை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் வடித்தெடுக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால் ஆதரிக்கிறோம். பா.ஜ.க - தி.மு.க கூட்டணி ஏற்பட்ட 1999, 2001 தேர்தல்களைத் தவிர மிகப் பெரும்பாலான தேர்தல்களில் திமுக